சென்னை: மத்திய அரசு சுற்றறிக்கையின்படி குறிப்பிட்ட சிலர் பிஃஎப் தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு மூலம் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
1) சர்வதேச தொழிலாளர்கள்(IW), தங்கள் பணிகளை முடித்துவிட்டு ஆதார் பெறாமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள்.
2) நிரந்தரமாக வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்த மற்றும் ஆதார் இல்லாமல் குடியுரிமை பெற்ற இந்திய தொழிலாளர்கள்
3) நேபாள குடிமக்கள் மற்றும் பூட்டானின் குடிமக்கள் பணியாளர் வரையறைக்குள் வருபவர்கள் மற்றும் EPF & MP சட்டத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவில் வசிக்காதவர்கள் மற்றும் அதன் விளைவாக ஆதார் இல்லாதவர்கள்.
மேற்கண்ட உறுப்பினர்களிடம் ஏற்கனவே யுஏஎன் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு யுஏஎன் உருவாக்கப்பட வேண்டும் என்றாலும், இப்போது ஆதார் பெற முடியாததால், யுஏஎன் உடன் ஆதாரை இணைக்க வேண்டிய தேவை நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பல லட்சம் சந்தாதாரர்களுக்கு இருக்கும் புகார்களை சரி செய்யும் விதமாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளதாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்புகளில் தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்திக்கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம்.
2025 ஆம் ஆண்டு முதல் ஏடிஎம் அடிப்படையிலான PF டெபிட் முறை: தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்படலாம் என்கிறார்கள். அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும்
அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎப் கணக்கிற்கான வட்டிப் பணத்தை அரசு விரைவில் வங்கி கணக்கில் செலுத்தும் என்று அறிவித்தது. ஆனால் இன்னும் அந்த பணம் செலுத்தப்படவில்லை. சுமார் 7 கோடி ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். ஊழியர்களின் EPF கணக்கில் எவ்வளவு வட்டித் தொகை வந்துள்ளது என்பதை எளிதாகச் சரிபார்க்கலாம்.
2023-24 நிதியாண்டுக்கான (FY24) சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் முக்கியமான சில தகவல்கள் வெளியாகின.
கடந்த பிப்ரவரியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த வட்டி டெபாசிட் செய்யப்படும்.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் , இந்த செயல்முறையானது பைப்லைனில் உள்ளது, விரைவில் அங்கு காண்பிக்கப்படும். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது.
உங்கள் இபிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் பிஎஃப் ஆக டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அதற்கு வட்டியாக 8.25 ஆயிரம் ரூபாய் வரும். இதுதான் கணக்கு. அதிகபட்சம் இன்னும் 10 நாட்களில் இந்த பணம் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கண்டிப்பாக பணம் அளிக்கப்படும். இருப்பினும், FY23க்கான வட்டி மார்ச் 2024 நிலவரப்படி 281.7 மில்லியன் EPFO உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. EPF திட்டம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். EPF விதிமுறைகளின்படி, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை இந்த நிதிக்கு வழங்க வேண்டும்.
EPF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் EPFO இன் மத்திய அறங்காவலர் குழுவால் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், SMS அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் EPF இருப்பைச் சரிபார்க்கலாம். தங்கள் பாஸ்புக்கை சோதனை செய்வதன் மூலம், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி மற்றும் ஒட்டுமொத்த EPF இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். பல லட்சம் ஊழியர்களுக்கு விரைவில் இந்த மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Weather Data Source: Wettervorhersage 21 tage