10 மாவட்டங்களில் இன்று வெளுக்க போகுது மழை...3 மாவட்டங்களுக்கு ‘ஹை அலர்ட்’!

post-img

தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. இதேபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை வரும் 8ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை: இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10 மாவட்டங்கள் அலர்ட்: நீலகிரி, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 13 செ.மீ., மழையும், சின்கோனாவில் 11 செ.மீ., மழையும், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு வார்னிங்: இன்று தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

சென்னையில்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

அந்த வகையில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 13 செ.மீ., மழையும், சின்கோனாவில் 11 செ.மீ., மழையும், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

அரபிக்கடல் பகுதியை பொறுத்தவரை இன்று தொடங்கி வரும் 6ஆம் தேதி வரை இலட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், மத்திய அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூராவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Related Post