சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு சில க்ளூ கொடுத்திருக்கிறார்.
பாத்திமா பாபு செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் நடிகையாகவும், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் பற்றி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் இந்த வாரம் கமல்ஹாசன் பேசிய விதம் மற்றும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்குள் எழுதப்பட்டிருக்கும் வாசகம் குறித்து இந்த வாரத்தில் மூன்று எலிமினேஷன் இருக்கும் என்று கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதுதான் என்று கமல்ஹாசன் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பார். அது போல தான் பல நேரங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் இப்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை சொல்லவே வேண்டாம். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் சண்டை சச்சரவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
அதே நேரத்தில் யாரும் யோசித்துக் கூட பார்க்காத வகையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று கூறி வந்த பிரதீப் திடீரென்று ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் பல போட்டியாளர்கள் இந்த முறை அதிகமான இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசிக்கொண்டும். கெட்ட வார்த்தை பேசிக் கொண்டும் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ஒரு சிலர் செங்கொடி தூக்கி கம்பளைண்ட் செய்த காரணத்தால் பிரதீப்புக்கு அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது.
அதற்குப் பிறகு கடந்த வாரத்திலும் நிக்சன் மற்றும் அர்ச்சனா இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது நிக்சன் அதிகமான தகாத வார்த்தைகளை பேசி இருந்தார். அதனால் நிக்சனுக்கு கமல்ஹாசன் ரெட்கார்ட் கொடுக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிக்சனுக்கு எல்லோ கார்டு மட்டும் கொடுத்துவிட்டு செங்கொடி தூக்கி கம்ப்ளைன்ட் செய்த அர்ச்சனா, தினேஷ், மணி போன்றோரை கமல்ஹாசன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார்.
இப்படியான நிலையில் இந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அதில் இந்த வாரம் குறிப்பாக நிக்சன், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஆறு பேர் இருக்கின்றனர். இதில் கடந்த வாரத்தில் எலிமினேஷன் வைக்கப்படாதல்தான் இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன் இருக்கும் அதில் கூல் சுரேஷ் அல்லது நிக்சன் வெளியேறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் இந்த முறை மூன்று எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த முறை அனன்யா கூல் சுரேஷ், நிக்சன் மூவரும் வெளியேறுவதற்கு என அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த முறை மூன்று எலிமினேஷன் என்பதற்கான சில க்ளூ கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கும் பாத்திமா பாபு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சில க்ளூக்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் இந்த முறை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் மூன்று வந்தால் டுமீலு என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை யாராவது கவனித்தீர்களா? அது என்ன குறியீடு என்று கேட்டிருக்கிறார். அதோடு ஒருவேளை ஆட்கள் குறைந்து ஆறு பேருக்கு பதிலாக மூவர் வரும்போது ஏதும் சம்பவம் இருக்குமோ என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் கமல்ஹாசன் வீட்டில் நிறைய பேர் இருக்கீங்க சமயத்துல எனக்கு பசிச்சா மூணு முட்டை கூட போட்டு சாப்பிட வேண்டும் என்று சொன்னதும் குறியீடு தானோ என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில் இதற்கு அதிகமானோர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பல ரசிகர்கள் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் இந்த முறை மூன்று பேர் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
Weather Data Source: Wettervorhersage 21 tage