சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டிசம்பர் 12ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அர்ச்சனாவை பற்றி நிக்சன் விஷ்ணுவிடம் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
ஏற்கனவே அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே கடும் பிரச்சனை இருக்கும் நிலையில் இப்போது புது பிரச்சனையும் வெடித்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7இல் பிரதீப் உடைய வெளியேற்றம் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி அடைய வைத்தது. அதை தொடர்ந்து கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விவரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வார நாமினேஷனில் இருந்த மணி அல்லது நிக்சன் தான் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாத காரணத்தால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. அதோடு கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் இருக்கும் மத்தியிலும் அதிகமான பிரச்சனைகள் எழுந்தது.
பிக் பாஸ் 7: தரம் இல்லை உங்களிடம் நிக்சனை வெளுத்தெடுத்த கமல்ஹாசன்.. ஆனால் இதை கவனிச்சீங்களா?
அதிலும் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிய அளவில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சண்டையின் போது நிக்சன் அர்ச்சனாவை படுமோசமாக திட்டி இருந்தார். மேலும் வினுஷாவை பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்று மிரட்டவும் செய்து இருந்தார். இதனால் மற்ற போட்டியாளர்கள் கூட கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் நிக்சனுக்கு எல்லோ கார்டு கொடுத்திருந்தார். அதோடு நிக்சனை கண்டித்ததை விடவும் தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணுவை தான் கமல் அதிகமாக கண்டித்து இருந்தார். அதிலும் அர்ச்சனா உப்புமா சாப்பிட்டுக் கொண்டே நிக்சனிடம் சண்டையிட்டது குறித்து இரண்டு மூன்று முறை குத்தலாக கமல்ஹாசன் பேசியிருந்தார்.
பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகள் இரண்டு நாளுமே அர்ச்சனா பேசிய மற்றும் நடந்து கொண்ட விதம்தான் கமல்ஹாசன் அதிகம் குத்தி காட்டி இருந்தார். இந்த நிலையில் அர்ச்சனா தான் செய்த செயல்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று பேசி இருந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடு முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ச்சனா வேஷ்டி சட்டை அணிந்து இருக்கிறார்.
பிக் பாஸ் 7: மன்னிப்பு கேட்ட அர்ச்சனாவுக்கு நிக்சன் சொன்ன சினிமா டயலாக்.. அப்போ பிரச்சனை முடியாதா?
அதே நேரத்தில் நிக்சனும், விஷ்ணுவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிக்சன் அர்ச்சனா அக்கா கமல் சார் திட்டுன உடனே மறுநாள் காலையில் எப்படி மாறினாக பார்த்தீர்களா? நான் தப்பை உணர்ந்துட்டேன் என உண்மையாவே ஃபீல் பண்ணி இருந்தா இப்படி பண்ண மாட்டாங்க, வேணும் என்று தான் இப்படி பண்றாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் அடுத்த பிரச்சனை தொடங்கி இருக்கும் நிலையில் அப்போ இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் அர்ச்சனா அல்லது நிக்சன் இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage