புத்தாண்டு பலன் 2025: துன்பங்கள் விலகி துள்ளிக் குதிக்கப் போகும் துலாம் ராசிக்காரர்களே 2025 புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என அனைத்துப் பெயர்ச்சிகளும் சாதகமாக அமைவதால் உங்களுடைய வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது. என்னென்ன நற்பலன்களை புத்தாண்டு உங்களுக்கு வழங்கப் போகிறது. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம்... (Rasi palan for thulam)
அடுத்து வரும் அனைத்து பெயர்ச்சிகளும் துலாமிற்கு அமோகமாக உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் குரு அமருவதால், பாக்கிய ஸ்தானத்துடைய பார்வை ல்கனத்தின் மேல் விழுவதால் அனைத்து சுப காரியங்களும் நடக்கும். அனைத்துப் பிரச்னைகளும் தீரும். குடும்பத்துக்குள் அன்பு பெருகும். ஆனந்தக் கண்ணீர் வரும் அளவுக்கு அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். (Puthandu rasi palan for thulam)
வீடு, வாகன யோகம்: துலாம் ராசிக்காரர்களின் மாத்ரு வர்க்கம், வீடு, வாகனம், மனை, அலுவலகம் என அனைத்திலும் அனுகூலம் உண்டாகும். மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு உண்மையான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வெகுநாட்களுக்குப் பிறகு அமையும். இதனை நீங்கள் புத்திசாலித்தனமாக உபயோகித்துக் கொள்ள வேண்டும்.
புதனின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும்போது வெளிநாட்டுத் தொடர்பு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம், உத்தியோகம், வேலைவாய்ப்பு, அங்கே சென்று வியாபாரம் செய்வது, கிரீன் கார்டு, புளூ கார்டு, முதலீட்டிற்கான லாபம், அங்கீகாரம் ஆகியன கிடைக்கப் போகிறது. அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு நல்ல பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார்.
கடன் தொல்லைகள் நீங்கும்: வேலை இல்லாமல் இருந்து வந்தவர்களுக்கு சூப்பரான வேலை அமையும். 3, 6, 10க்குரிய இடங்களல் சனி இருக்கும்போது அந்த ராசிக்காரர்களை யாருமே அடித்துக் கொள்ளவே முடியாது. சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்தில் சனி அமருவதால் தில்லாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்வீர்கள். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால், அந்தக் கடனே உங்களை வளர்க்கக்கூடிய கடனாக அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. (New year rasi palan for thulam)
வெளிநாடு யோகம்: 5 ஆம் இடத்தில் ராகு அமர்வதால் வெளிநாடு சென்று கொண்டே இருப்பீர்கள். சமூகத்தில் உள்ள பெரிய இடங்களில் எல்லாம் நீங்கள் அலங்கரிப்பீர்கள். சனி ஆறாம் இடமான குருவின் வீட்டுக்குப் போவதால் பசு மடங்கள் ஆரம்பிப்பீர்கள். மீன் உணவுகளைத் தொடங்குவீர்கள். வேலையாட்கள் மூலம் வரக்கூடிய பிரச்னைகள் சங்கடங்கள் தீரும்.
கல்வி: மருத்துவப் படிப்புக்கான சீட்டுகள் கிடைக்கும். சித்தா மருத்துவம் கைகூடி வரும். மே மாதத்துக்குப் பிறகு ஒவ்வாமை போன்ற விஷயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது. அருமையான ஆண்டாக அமையும். (துலாம் ராசிக்கு 2025 எப்படி இருக்கும்)
பரிகாரங்கள்: சிம்ம ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மரை வியாழக்கிழமை தோறும் வணங்கி வருவது நல்லது. பாக்கிய ஸ்தானம் ஒன்பதாம் இடத்தில் குரு உள்ளது. குரு ராகுவுடைய நட்சத்திரத்தின் மேல் அமருவதால், அந்தப் பார்வை ராசி லக்னத்தின் மேல் விழுவதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். நல்ல நேரமாக இருப்பதால் சரியான வழியில் செல்வது நல்லது.
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே வளர்த்து வந்தாலும் வேறு யாராவது பார்த்துக் கொள்வது நல்லது. உபயோகித்த ஆடைகளை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். கருப்பு நிறத்தை தவிர்த்து, லைட் ப்ளூ கலரால் அனுகூலம் உண்டாகும்.