"படுத்தேவிட்டது" கனடா! பாரதத்திடம் சரண்!மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன

post-img

டெல்லி: அமெரிக்கா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலேனி ஜோலி ரகசியமாக சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து காலிஸ்தான் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால் 1990களுடன் இந்தியாவில் இந்த அமைப்பு அழித்தொழிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் புகலிடம்: இருப்பினும் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அரசியல் அகதிகளாக தஞ்சம் அடைந்த சீக்கியர்கள் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்காக பல்வேறு அமைப்புகளை நடத்தி வந்தனர். இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி அளித்தது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவின் அரசியலில் செல்வாக்கு செலுத்தி தீர்மானிக்கும் சக்திகளாகவும் வளர்ந்துள்ளனர்.
நிஜ்ஜார் படுகொலை: இந்நிலையில் கனடாவில் பதுங்கி இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி, இந்தியாவால் தேடப்பட்ட நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என ஆதாரமே இல்லாமல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.


கனடாவுக்கு பதிலடி: அத்துடன் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த மூர்க்க நடவடிக்கைக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் பதிலடிகளின் உச்சம் என்பது ஒட்டுமொத்தமாக 41 இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் உத்தரவுதான். இதனால் கனடா நிலைகுலைந்தது. மேலும் கனடாவிலும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை கடுமையான விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் சரண்?: இதனால் வேறுவழியே இல்லாமல் இந்தியாவிடம் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்தியாவுக்கு சமாதான தூதுவிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ. அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை ஜெய்சங்கரை கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலேனி ஜோலி ரகசியமாக சந்தித்து சமாதானப் பேச்சுகளை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் இந்தியாவுடன் மீண்டும் நட்புடன் உறவைத் தொடர கனடா விரும்புவதாகவும் கனடா தரப்பில் இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் தரப்படாது எனவும் உறுதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இந்த சந்திப்பு, பேச்சுவார்த்தைகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

Related Post