சென்னை: 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில், டிசம்பர் 28ம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில், சுக்கிரனின் வருகை சில ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்க உள்ளது. காதல், ஈர்ப்பு, இன்பம் ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். அவரது அருளால் ஒருவரது வாழ்வில் அனைத்து வகையான வசதிகளும் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.
சுக்கிரன் பெயர்ச்சி எப்போது? சுக்கிரன் டிசம்பர் 28ம் தேதி இரவு 11:28 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சியால் (Sukran Peyarchi) மேஷம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு 2025ம் ஆண்டு பொற்காலமாக அமையும்.
அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
சனி சுக்கிரன் சேர்க்கை: 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28ம் தேதி, சுக்கிரன் ஏற்கனவே சனி இருக்கும் கும்ப ராசிக்குள் பெயர்ச்சியாகும்போது, சனி சுக்கிரன் சேர்க்கை நிகழும். இந்த அற்புதமான சேர்க்கை 2025ம் ஆண்டை மேலும் சிறப்பானதாக மாற்றும்.