விளாத்திகுளம் காட்டில் பெண்ணுடன் "லீலை".. அதுவும் போலீஸ்காரர்... வீடியோ

post-img

மகா கேவலமான, ஒரு காரியத்தை செய்து வைத்திருக்கிறார் அந்த நபர்.. அதுவும் ஒரு போலீஸ்காரர்.. நம்ம தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விளாத்திகுளம் அருகே உள்ளது கே.சுந்தரேஸ்வரபுரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜேந்திரன்... இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர்.

போலீஸ்காரர்: அதற்கு பிறகு, பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில் இப்போதைக்கு விளாத்திகுளம் போலீஸ் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவருடன் ஆபாச செயல்களில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், விளாத்திக்குளம் நடுக்காட்டில், புதர்களும், செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.. அப்போது, ராஜேந்திரன், யூனிபார்மில் இல்லாமல், டி-ஷர்ட் மற்றும் லுங்கியுடன் காணப்படுகிறார்.

அவருக்கு பக்கத்தில் ஒரு பெண் சுடிதார் அணிந்து உட்கார்ந்துள்ளார்.. அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. துப்பட்டாவில் தன்னுடைய முகத்தை மூடியபடி காணப்படுகிறார்.

லீலைகள்: பிறகு இருவருமே கசமுசா காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரம்பார்த்து, மர்ம நபர்கள் இவர்களை வீடியோ எடுக்கிறார்கள்.. தங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள் என்பதை கண்டதுமே, அந்த ஜோடிக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனே 2 பேரும் அங்கிருந்து பயந்து ஓடுகிறார்கள்.. ஆனால், அந்த மர்ம நபர்களோ, விடாமல் அந்த ஜோடியை துரத்தி துரத்தி வீடியோ எடுக்கிறது.

இப்படி, பயந்து ஓடும் காட்சிகள், போட்டோக்கள், இப்போது பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இணையத்திலும் பரபரப்பாக வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே விளாத்திகுளம் போலீஸ் உட்கோட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் பாலியல் புகார்களில் சிக்கி வருகிறார்கள்.. இதில் சிலர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கும், வேறு போலீஸ் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் வருகிறது.

அதிர்ச்சி: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு போலீஸ்காரர் ஆபாச வலையில் விழுந்துள்ளார்.. இந்த சர்ச்சை வீடியோவை பார்த்து பொதுமக்கள் மட்டுமல்லாமல், போலீஸ் வட்டாரங்களும் அதிர்ச்சியாகி உள்ளன. இந்த வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பாக ஷேர் ஆகி வருகிறது.



Related Post