கூகுளில் ரூ.50 லட்சம் சம்பளம்.. நாடே திரும்பி பார்க்கும் மிடில் கிளாஸ் மாணவன்..

post-img

இன்றைய காலத்தில் படித்து முடித்துவிட்டு ஒரு வேலைக்கு செல்வதற்குள் பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனென்றால், படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஏன்? நம்மில் பலரும் செய்துவரும் வேலைகளை கவனித்து பார்த்தால், அவர்கள் படித்த படிப்புக்கு நேர்மாறாகவே இருக்கும்.

இப்படி கிடைத்த வேலைக்கு செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடன் வாங்கி கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பிடிக்காத வேலைக்கும் செல்ல தொடங்கிவிட்டனர். இருப்பினும், சில இளைஞர்கள் படிக்கும்போதே தங்களது அதீத திறமையால் மிகப்பெரும் நிறுவனங்களில் வேலையை வாங்கி விடுகின்றனர்.

இப்படி பல இந்திய மாணவர்கள் அமெரிக்க டெக் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். அந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர் (Harshal Juikar) என்னும் இளம் பட்டதாரி ரூ.50 லட்சம் சம்பளத்தில் கூகுளின் வேலை வாய்ப்பை பெற்று, வளர்ந்துவரும் மாணவர்களுக்கு உத்வேகமாக மாறியிருக்கிறார்.

புனேவில் வசிக்கும் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர், அதே நகரத்தில் உள்ள எம்ஐடி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் (MIT World Peace University) எம்எஸ்சி பிளாக்செயின் டெக்னாலஜி (M.Sc in Blockchain Technology) படிப்பை முடித்துள்ளார். படிக்கும்போதே, இவரது அதீத திறமையால், கூகுள் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா சயின்டிஸ்ட் (Junior Data Scientist) இன்டர்ன்ஷிப்புக்கு தேர்வாகியிருக்கிறார்.

இதையடுத்து, 1.5 ஆண்டுகள் இன்டர்ன்ஷிப் டிரெய்னியாக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் இவரது திறமையும், டெக்னாலஜி மீதான அவரது ஆர்வமும் அவருக்கு கூகுள் நிறுவனத்துடைய நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளது. அதன்பின் படிப்பை முடித்த அவருக்கு எம்ஐடி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் கூகுள் நிறுவனம் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹர்ஷல் ஜூய்கர், அந்த நிறுவனத்தின் டேட்டா சயின்டிஸ்ட் பணியிடத்தை தட்டிச் சென்றுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.50 லட்சத்துக்கும் மேல் ஆண்டு சம்பளத்தை கொடுக்க இருக்கிறது. இவ்வளவு பெரிய சம்பளம் பொதுவாக கம்ப்யூட்டர் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஆனால், திறமையால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை நிரூபித்து, அதே சம்பளத்தை ஹர்ஷல் ஜூய்கர் பெற்றுள்ளார். இவரது எதிர்காலம் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போல இருக்கும் என்று அவரது சக மாணவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, ஹர்ஷல் ஜூய்கர் கூறுகையில், கல்லூரி காலத்தில் டெக்னாலஜி மீதான ஆர்வத்துடன் தொடர்ந்து பயணித்தேன். அது, சில நேரங்களில் மிகப்பெரும் சவால்களையும், சந்தேகங்களையும் கொடுத்தது.

இருப்பினும், பாதை மாறாமல் தொடர்ந்து சென்றேன். இப்போது, அது, எனக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெற்றியை பெற்று தந்துள்ளது. இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவு அளித்த எம்ஐடி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டிக்கு, நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவர்களின் உதவி இல்லாமல், இந்த குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமாகியிருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

இவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதுகுறித்து அவர் படித்த யுனிவெர்சிட்டியின் துணை வேந்தர் ரவிக்குமார் சிட்னிஸ் கூறுகையில், "ஹர்ஷலின் சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். அவரது, இந்த வெற்றியானது, எங்களது கல்வி நிறுவத்தின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.

அதே நேரத்தில், படித்து வரும் மாணவர்களுக்கு தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கும், புதுமையான கலாச்சாரத்தில் நுழைவதற்கும் இந்த வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Related Post