பாராளுமன்றத்தில் ஒலித்த ஜீ தமிழ் பிரபலத்தின் பெயர்..

post-img

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியில் சற்றும் எதிர் பார்க்காத வகையில் இந்த வாரம் பரபரப்பான விதிமுறை மாற்றம் நடைபெற்று இருக்கிறது.
நாடு விட்டு நாடு மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும ஜீ தமிழ் நிகழ்ச்சி பற்றிய விவாதம் நடைபெற்று இருக்கிறது.
இந்த நிலையில் ஜீ தமிழ் தரப்பிலிருந்து செய்த செயலை பலதரப்பட்டோர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.


சின்னத்திரையில் சீரியலுக்கு மாற்றாக ரசிகர்களின் மனதை கவர்ந்த வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதற்கு போட்டியாக இருக்கும் சேனல்களிலும் அதுபோன்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடுகிறது. அந்த மாதிரி தான் தற்போது பல பாடகர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.


அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சரிகமபா லிட்டில் சாம்பியன் என்று அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அதுபோல சரிகமபா சீனியர் என்ற தலைப்பிலும் பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.



இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் கழித்து பல பிரச்சனைகளை தாண்டி இலங்கையிலிருந்து அசானி என்கிற பெண் கலந்து கொண்டு இருந்தார். அந்த குழந்தையின் சூழ்நிலையை நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நடுவர்கள் கூறியிருந்தனர்.


அதே நேரத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்த அசானி தன்னுடைய சொந்த ஊரில் இருந்து தமிழகத்திற்கு வருவதற்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய ஊர்காரர்கள் பலரும் தங்கள் உண்டியலில் இருந்த பணத்தை முதற்கொண்டு கொடுத்து அசானியை வழி அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் நடுவர்கள் சொன்ன இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது அவர் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.


அந்த வகையில் இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இலங்கை பாராளுமன்றத்தில் அசானி பற்றி விவாதம் நடைபெற்று இருக்கிறது. அதை பதிவு செய்த நடுவர்கள் இந்த குழந்தை தொடர வேண்டும் என்று நினைத்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தால் அசாணி தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பாடலாம் என்று கூறியிருந்தனர்.


அதன்படி இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும் தங்களுடைய சம்மதத்தை கொடுக்க அசானி தற்போது இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக நடுவர்கள் அறிவித்திருக்கின்றனர். இந்த முடிவுகளுக்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


காரணம் அசானி முறையான எந்த பயிற்சிகளும் இல்லாமல் ரேடியோவில் பாடலை கேட்டு தன்னுடைய முயற்சியாலே பாட்டு பாடி பலருடைய மனதை கவர்ந்து வருகிறார். இவருக்கு முறைப்படி இசை கற்றுக் கொடுத்தால் இவர் மட்டுமில்லாமல் இவரை போல சாதிக்க துடிக்கும் பலருக்கும் மோட்டிவேஷன் ஆக இருக்கும் என்றும் இந்த குழந்தையின் திறமை வெளி உலகத்திற்கும் தெரிய வேண்டும் என்றும் அதிகமான ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

Related Post