சென்னையில் குறிக்கப்பட்ட முக்கிய ஏரியாக்கள்.. அந்த பக்கமே போகாதீங்க.. மூடப்படும் சாலைகள்.. ஏன்?

post-img
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நகரம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால், மாற்றுப்பாதைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல சாலைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்துக்கு 110 க்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்டுள்ளன, இதனால் தினசரி 10-30 நிமிடங்கள் தாமதமாகிறது. இனி மேலும் சில சாலைகள் தடை செய்யப்படலாம். வில்லிவாக்கம், அடையாறு மற்றும் தொரைப்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகள் 2026 வரை இடையூறுகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. ஏறக்குறைய 25 கிமீ சாலை மெட்ரோ பணிகளுக்காக பயன்படுத்தப்படும். நெரிசலை குறைக்கும் வகையில், தனியாரின் நிலத்தை வாடகைக்கு எடுத்து, பாதையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. . இருப்பினும், வாகன ஓட்டிகள் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பணிகளின் நிலை என்ன: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் (C4-ECV01) தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக முடித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது, இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். இதில் குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொது பயன்பாட்டில் உள்ள (உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால்.,) போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர் திரு.எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), GC2-AEON நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு. முருகமூர்த்தி, L&T நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மெட்ரோ ரயில்; சென்னை போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதன் ரூட் கட்டி முடித்த பிறகு விரைவில் மெட்ரோ சேவை தொடங்கும். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

Related Post