சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.. யாருக்கு வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று சாணக்யா டிவி கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 133 தொகுதிகளை வென்றது, அதேசமயம் திமுக கூட்டணி மொத்தம் 159 தொகுதிகளில் வெற்றி கண்டது. பாஜக - அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது.
அதில் அதிமுக 66 தொகுதிகளை வென்றது. பாஜக 4 இடங்களை வென்றது. மற்ற கட்சிகள், கூட்டணிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எந்த இடமும் பெறவில்லை. திமுக தனிப்பட்ட வகையில் 37.70 சதவிகித வாக்குகளை வென்றது. அதிமுக 33.29 சதவிகித வாக்குகளை வென்றது. காங்கிரஸ் 4.27 சதவிகித வாக்குகளை வென்றது. நாம் தமிழர் 6.58 சதவிகித வாக்குகளை வென்றது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.. யாருக்கு வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று சாணக்யா டிவி கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது.
நாம் தமிழர் - 5% வாக்குகளை வெல்லும்
பாஜக - 18% வாக்குகளை வெல்லும்
தமிழக வெற்றிக் கழகம்- 23% வாக்குகளை வெல்லும்
அதிமுக - 23% வாக்குகளை வெல்லும்
திமுக - 31%
அதன்படி திமுக தனிப்பட்ட வகையில் 37.70 சதவிகித வாக்குகளை வென்ற நிலையில் வாக்குகள் 31 ஆக குறையும்.
மேலும் அதிமுக 33.29 சதவிகித வாக்குகளை வென்ற நிலையில் தனிப்பட்ட வகையில் அவர்கள் 10% வாக்குகளை இழந்து 23% வாக்குகளை வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம்- 23% வாக்குகளை வெல்லும் என்று சாணக்யா டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாணக்யா கணிப்பு: முன்னதாக சாணக்யா டிவி சார்பாக லோக்சபா தேர்தலில் ஒரு கணிப்பு வெளியிடப்பட்டது.
அதில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 32 சதவிகிதம் பேர் குறிப்பிட்டனர். ஆனால் 46.97 பேர் அந்த தேர்தலில் வாக்களித்தனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 21 சதவிகிதம் பேர் குறிப்பிட்டனர். 23.05 சதவிகிதம் பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். அதே சமயம் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 22 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். பாஜக கூட்டணிக்கு இதில் 18.28 பேர்வாக்களித்தனர் .
இதில் அதிமுகவை விட பாஜக ஒரு சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெறும் என்று கணிப்பில் கூறப்பட்டது.பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டது. ஆனால் அதிமுக இரண்டாவது பெரிய கட்சியாக தொடர்ந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.. யாருக்கு வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று சாணக்யா டிவி கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் அதிமுகவிற்கு இணையாக தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக - திமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறிய நிலையில்.. அதிமுகவிற்கு இணையாக தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage