சென்னை: இயக்குனர் பி.வாசு சந்திரமுகி திரைப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பகீர் தகவலை கூறி இருக்கிறார்.
அதாவது நானும் பிரபுவும் சண்டை போட்டால் ரஜினி சந்தோஷப்படுவார் என்று பி. வாசு கூறியிருக்கிறார்.
அதுபோல சந்திரமுகி 2 திரைப்படத்தைப் பற்றியும் அதில் பிரபு நடிக்காதது குறித்தும் பல தகவல்களை பி வாசு பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிய அளவில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்று 90 கிட்ஸ்களை மிரட்டிய சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போ சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் புது விதமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனரான பி.வாசு திரைப்படத்தை பற்றி பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. பி.வாசுவின் இயக்கத்தில் சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி, குசேலன் என பல திரைப்படங்களில் நடிகர் பிரபு நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது வெளியாக இருக்கும் சந்திரமுகி திரைப்படம் 2 திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லை.
அது குறித்து கேட்ட கேள்விக்கு பி வாசு பதில் அளிக்கையில் காண்ட்ராக்டர் செந்தில்நாதன் ஒரே ஊரில் இருக்க மாட்டார். அவர் வேலை முடிந்து வேறு ஊருக்கு செல்லும்போது முருகேசனிடம் இந்த வீட்டை பார்த்துக்கோ அல்லது வித்துக்கோ என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பி இருக்கிறார். அந்த நிலையில் அந்த வீட்டை இன்னொரு கோஸ்டியிடம் முருகேசன் விற்பதற்காக படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த குடும்பத்தினரால் மீண்டும் சந்திரமுகி எப்படி கிளம்புகிறது என்பதுதான் சந்திரமுகி 2 படத்தின் கதை என்று வாசு கூறியிருக்கிறார்.
முதல் சந்திரமுகியில் கங்கா பார்வையில் வேட்டையனாக ரஜினி வருவார். ஆனால் உண்மையாகவே ஒரு வேட்டையன் எப்படி இருந்திருப்பார் என்கிற கதையைத்தான் இரண்டாவது பாகத்தில் காட்டப் போகிறோம் என்று இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு இவர்களெல்லாம் ஏன் நடிக்கவில்லை என்பதற்காக விளக்கத்தையும் கொடுத்து இருக்கிறார்.
அதுபோல சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பிரபு கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால் தான் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் திரைப்படத்தின் அப்டேட் குறித்து ஆரம்பத்தில் இருந்து என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார். எப்போதும் என்னிடம் சூட்டிங் ஸ்பாட்டில் கலாட்டா செய்து கொண்டிருப்பார். எங்கள் இருவருக்கும் ஸ்கிரிப்டில் தொடங்கி ஷாட், சமையல், சாப்பாடு என எல்லாவற்றிலும் சண்டை நடக்கும். நாங்க ரெண்டு பேரும் சண்டை ஸ்டார்ட் செய்துவிட்டால் நடிகர் ரஜினிகாந்த் அதை சந்தோஷமாக பார்த்து ரசிப்பார் என்று அந்த பேட்டியில் பி.வாசு பேசியிருக்கிறார்.