எதிர்நீச்சல்: அப்பத்தாவுக்கு தெரிய வந்த உண்மை..

post-img

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் ஆறாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அதில் வீட்டு மருமகள்கள் செய்து கொண்டிருக்கும் வேலை பற்றி மொத்த விவரமும் அப்பத்தாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அது குறித்து அப்பத்தா பாராட்டுகிறார். அதே நேரத்தில் கதிர் மீண்டும் புது சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதுபோல ஜனனிக்கு இன்ப அதிர்ச்சியும் கிடைத்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எபிசோடின் ஆரம்பத்தில் ஆடிட்டர் மற்றும் வக்கீல் இருவரும் அப்பத்தாவை நீங்கள் கொலை செய்துவிட்டால் கூட சொத்துக்கள் எல்லாம் உங்கள் பெயரில் வருமா என்று சொல்ல முடியாது. ஆக்சிடென்ட் ஆகி ஒருவர் இறந்தால் அது வேற மாதிரி நாங்கள் பார்த்துக் கொள்வோம் ஆனால் நாமே பிளான் பண்ணி கொலை செய்துவிட்டு எப்படி என்று குணசேகரன் இடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு குணசேகரன் என்ன செய்வீங்களோ எது செய்வீர்களோ தெரியாது எனக்கு மொத்த சொத்தும் என் பெயருக்கு வரணும். அதுக்கு உண்டான வழியை பாருங்க. நீங்க வழக்கமா கேக்குற ஃபீசில் பல மடங்கு சேர்த்து நான் தருகிறேன் என்று சொல்ல, ஆடிட்டரும் வக்கீலும் யோசிக்கின்றனர். பிறகு நீங்க யோசிச்சு நல்ல முடிவை எடுங்க போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்துவிட்டு குணசேகரன் கதிரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போ ஹாஸ்பிடல் வார்டுபாய்.. இப்போ வில்லன் ஸ்டண்ட் “சில்வா”.. அவர் மனைவி மற்றும் மகள் யார் தெரியுமா?
அப்போது கதிர் நான் அப்பத்தாவை முடிக்கிறேன் என்று சொல்ல, இது என்ன கல்யாணம முடிக்க போற விஷயமா? கொலை பண்ணனும் பா யோசிச்சு பண்ணுவோம் என்று குணசேகரன் பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் அப்பா தான் வீட்டு பெண்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது நந்தினி தனக்கு எல்லா விதமான சமையலும் செய்ய தெரிந்து விட்டது என்று சொல்ல அதற்கு அப்பத்தா நான் உங்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று யோசிச்சிட்டு இருக்கேன். நீங்க உங்களா அடிமைப்படுத்துறவங்களுக்கு வக்கனையா சமைச்சு கொடுத்துட்டு இருக்கீங்களா என்று கேட்கிறார்.
அதற்கு நந்தினி நான் இவங்களுக்காக சமைக்கல, கேட்டரிங் பிசினஸ் தொடங்கி இருக்கிறேன். அதுக்காகத்தான் விதவிதமாக சமைக்க கத்துக்கிட்டு இருக்கேன். நான் மட்டுமல்ல ஈஸ்வரி அக்காவும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆக மாறி விட்டாங்க. தர்ஷன் காலேஜில் பேசிக்கொண்டு இருக்காங்க. அதுபோல ரேணுகா அக்காவும் பரதநாட்டியம் ஆன்லைன் கிளாஸ் எடுக்குறாங்க. ஐஸ்வர்யா ஸ்கூலிலுக்கும் போய் சொல்லிக் கொடுக்காங்க என்று சொல்ல அப்பத்தா சந்தோஷப்படுகிறார்.
எதிர்நீச்சல்: ஷேர் விஷயத்தில் அப்பத்தாவின் முடிவு.. கோபத்தில் ஜீவானந்தம்.. அதிர்ச்சியில் குடும்பம்
அத்தோடு நாங்க எல்லாருமே இப்படி மாறியதற்கு காரணம் ஜனனி தான் என்று எல்லா மருமகள்களும் சொல்ல, அதைக் கேட்டு எல்லாரையும் ஏற்றிவிட்ட ஏணி நீ என்ன பண்ணி இருக்க என்று அப்பத்தா கேட்க, நான் எனக்கு பிசினஸை தொடங்குவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த சொத்து பிரச்சனை முடிந்ததும் அதில் என்னுடைய கவனத்தை செலுத்துவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அப்பத்தா எல்லோரையும் பாராட்டிக் கொண்டிருக்க அடுத்த கட்டத்திற்கான நகர்வை நோக்கி நீங்கள் நகர வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது தர்ஷினி நீங்க உங்களோட 40% ஷேர் இவர்களுக்காக தானே வச்சிருக்கீங்க என்று அப்பத்தாவிடம் கேட்க, அப்படி யார் சொன்னது? நான் இவங்களுக்காக மட்டுமல்ல இவர்களைப் போல வெளியே வரவேண்டும் என்று துடிக்கும் பெண்களுக்காக உதவுவதற்காக தான் என்னுடைய 40% ஷேர் வைத்து இருக்கேன். இவங்களும் மேல வந்து பலருக்கும் உதவனும் என்று சொல்ல, மருமகள்கள் நாங்க உங்க 40% யாருக்காக ஆசையும் படல எங்களுக்கு அது தேவையும் இல்லை என்று சொல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கதிர் கிள்ளிவளவனை சந்திக்கப் போகிறார். அங்கு எதற்காக என்ன வர சொன்ன என்று கதிர் வளவனிடம் கேட்க, நீ அந்த ஜீவனந்தத்தை கொலை செய்யும் போது நான் கூட இருக்கணும். நான் ரெண்டு தடவ தோத்தது அதனாலதான் என்று சொல்ல, உனக்கு வயசு ஆயிடுச்சு அதுக்குள்ள வேலையை மட்டும் பாரு என்று கதிர் சொல்ல உங்க வீட்டில் நடக்கிறது எல்லாமே தெரியும். நீங்க ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பது சொத்துக்காக மட்டுமல்ல ஜீவானந்தத்திற்க்கு சப்போட்டா இருக்கிறது உங்கள் அண்ணி ஈஸ்வரி என்று சொல்ல கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
அதோடு ஜீவானந்தம் இப்பவும் இருக்கும் இடம் எனக்கு தெரியும். அவனை முடிப்பதற்கான பிளானை நான் போட்டு தருகிறேன் என்று வளவன் சொல்ல அதற்கு கதிர் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் கிச்சனில் பெண்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இவங்க கொண்டுவந்து தர காசுல சாப்பிடுறது பெரிய பாவம் என்று நந்தினி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஜனனி நந்தினி மற்றும் ரேணுகாவிற்கு அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்போது சக்தி வீட்டிற்குள் வந்து ஜனனியிடம் சந்தோஷமாக நாம பிசினஸ் தொடங்குவதற்காக லோன் கேட்டிருந்தோமே அந்த லோன் இப்போ நம்ம பெயருக்கு கிரெடிட் ஆகிவிட்டது என்று சொல்ல, ஜனனி இன்ப அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக எபிசோடு முடிவடைந்தது.

Related Post