அசத்தலான அப்டேட் வெளியிட்ட ஆப்பிள்.. யுஎஸ்பி டைப் சிக்கு மாறிய ஐபோன்15..

post-img

வாஷிங்டன்: ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.


ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், மாதம் புதிய மொபைல் மாடல்களை வெளியிடும். அதன்படி இன்றைய தினம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை வெளியிடுகிறது. இதில், ஐபோன் 15இல் வரும் முக்கிய அம்சங்கள் குறித்து கடந்த பல மாதங்களாகவே இணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்தப் புதிய மாடல்களில் குறிப்பிடத் தகுந்த அப்கிரேட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


மேலும், இதில் முதல்முறையாக டைப் சி சார்ஜிங் வசதி இருக்கும் என்றும் கூறப்பட்டது. சொன்னது போலவே ஐபோன் 15 மாடல்களில் டைப் சி போர்ட் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. அதே கேபிள் மூலமாக மேக், ஐபட், ஐபோன் ஏன் எ ஏர்பாட்ஸ் ப்ரோ ஆகியவற்றையும் அப்டேட் செய்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ மாடலில் கிரேடு 5 டைட்டானியம் சேஸ்சிஸ் வசதியுடன் அறிமுகம் ஆகிறது.


இதே மெட்டீரியல்தான் நாசாவின் செவ்வாய் கிரக திட்டத்தின் ரோவருக்கு பயன்படுத்தப்பட்டது. 6.1 டிஸ்பிளே வசதியுடன் இது அறிமுகம் ஆகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் டிஸ்பிளே உடன் வருகிறது. ஐபோன் 15 (128 ஜிபி) $799 இருந்து தொடங்கும். ஐபோன் 15 பிளஸ் விலை $899 என தொடங்குகிறது. ஐபோன் ப்ரோ மேக்ஸ் விலை $1,999 ல் இருந்து தொடங்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.


வாவ்.. இவ்ளோ வசதிகளா! ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம்.. வேற லெவலில் வந்து இருக்கும் அம்சங்கள்
புதிய பெரிஸ்கோப் கேமரா செட் அப் காரணமாக விலை சற்று கூடுதலாக இருப்பதாக கருதப்படுகிறது. ஐபோன் ப்ரோவில் மியூட் ஸ்விட்ச் கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக ஆக்‌ஷன் பட்டன் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சைலண்ட் மோட் அல்லது ரிங்மோட் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.


ஐபோன் 15 மாடல்களில் அறிமுகம் ஆகியிருக்கும் யு.எஸ்.பி. 3 போர்ட் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டா பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும் வகையில் கொண்டு இருக்கும். ஐபோன் 15 ப்ரோ மாடலில் 48MP பிரைமரி கேமரா சென்சார், 12MP 3x டெலிஃபோட்டோ கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5x டெலிஃபோட்டோ கேமரா, 120mm ஃபோக்கல் லென்த் வசதி ஆகியவையும் உள்ளது.


இந்தியாவில் ஐபோன் சீரிஸ் போன்களின் விலை:
ஐபோன் 15: ரூ. 79,900
ஐபோன் 15 Plus: ரூ. 89,900
ஐபோன் 15 ப்ரோ : ரூ. 1,34,900
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் : ரூ. 1,59,900.


எப்போது வாங்க முடியும்: ஐபோன் 15 மாடல் 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது. ஐபோன் 15 பிளஸ் 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது. பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 வண்ணங்களில் கிடைக்கும். பிரதான கேமரா 48 மெகா பிக்சல் கொண்டுள்ளது. ஏ16 பயோனிக் சிப், சாட்டிலைட் துணையுடன் ரோட்ஸைட் அசிஸ்டன்ட் ஆகியவை இடம் பெற்றுள்ளது.


ஐபோன் 15 புரோ, ஐபோன் 5 புரோ மேக்ஸ் மாடல்களை பொறுத்தவரை டைட்டானியம் ஃப்ரேம், ஏ17 புரோ சிப், யுஎஸ்பி டைப்-சி போர்ட். யுஎஸ்பி, 3ஆக்‌ஷன் பட்டன், ஸ்பேஷியல் வீடியோ ஆகியவை கொண்டுள்ளது. இந்த வீடியோக்களை ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் பார்த்து ரசிக்க முடியும். வரும் 15-ம் தேதி முதல் இந்த போன்களை முன்பதிவு செய்யலாம். 22-ம் தேதி முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post