சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதமே வெளியாகும் என சொல்லப்பட்டது.
ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் ராக்ஸ்டார் அனிருத் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.
ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ரஜினியுடன் தமன்னா, மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர்.
அண்ணாத்த தோல்வியில் இருந்து வெறித்தனமாக கம்பேக் கொடுக்கும் மோடில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் தான் மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என மல்டி ஹீரோக்களுடன் களமிறங்குகிறாராம் சூப்பர் ஸ்டார். ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயிலர் ரிலீஸ் தேதியுடன் தரமான மினி டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் ரஜினியின் லுக் செம்ம மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது செம்ம அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் குறித்து அனிருத் ட்விட் செய்துள்ளார். அண்ணாமலை படத்தில் ரஜினி - ஜனகராஜ் ஆகியோர் இணைந்து நடித்த ஒரு காட்சியின் போஸ்டரை வெளியிட்டு ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவித்துள்ளார் அனிருத். அந்த போஸ்டரில் ரஜினி தனது 4 விரல்களை ஜனகராஜ்ஜிடம் காட்டுகிறார். இதன்மூலம் இன்னும் 4 நாட்களில் தலைவர் என்ட்ரி என கேப்ஷன் கொடுத்துள்ளார் அனிருத்.
அதேபோல், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில், அனிருத்திடம் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இயக்குநர் நெல்சன் அப்டேட் கேட்பதை போல உள்ளது. இதன்மூலம் இன்னும் 4 தினங்களில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செம்ம எனர்ஜியில் உள்ளனர்.