வந்துருச்சு மெசேஜ்.. முதல்வர் காப்பீடு திட்டம்.. ரெடியா இருங்க மக்களே..

post-img

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. என்னன்னு பாருங்க.
தமிழக அரசை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைகளையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது..
அந்தவகையில், உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல லட்சம் பேர் பயன்: இந்த திட்டமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சுமார் 1.44 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 52 பரிசோதனை முறைகளுக்கும், இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
காப்பீடு திட்டம்: பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் இதுவரை வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. மொத்தத்தில், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருமே, பயன் பெறத்தக்க வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி ஒரு குடும்பம், ஒரு வருடத்துக்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்பது கூடுதல் அம்சமாக உள்ளது.
மா.சுப்பிரமணியன்: சமீபத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு பேட்டி தந்திருந்தார். அப்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு காரணம், கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையையே பலபேர் இன்னமும் வைத்திருக்கிறார்கள்.. அதனால், அந்த அட்டை இப்போது செயல்பாட்டில் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளவும், அதற்கு பதிலாக புதிய அட்டையை பெற்றுக் கொள்ளவும், இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டிருந்தார்.
சிறப்பு முகாம்: ஆனால், கடந்த 18ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.. அதற்கு பதிலாக, டிசம்பர் 2-ம் தேதிக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பலன்பெறலாம் என்றும் சுகாதாரத் துறை தற்போது கேட்டுக் கொண்டிருந்தது.
அந்தவகையில், நாளை 2ம்தேதி என்பதால் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.. இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்களும் கலந்துகொண்டு பயனடையலாம் என்று மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சுமார் 100 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற போகிறதாம்.. குறிப்பாக சென்னையில் மட்டும் 5 இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Related Post