சென்னை: ஓசூரில் முன்மொழியப்பட்ட கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைப்பதற்காக இரண்டு தளங்களை தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இடைக்கால சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) அடுத்த வாரம் இதற்கான ஆய்வைத் தொடங்கும்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2 இடங்களை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. முதலில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 இடங்களாக அவை குறைக்கப்பட்டு உள்ளது. ஓசூர் விமானம் நிலையம் அமைப்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
AAI ஆல் ஆய்வு செய்யப்பட்ட ஐந்து தளங்களில், ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) க்கு சொந்தமான தனியார் விமான ஓடுதளமும் அடங்கும். பெங்களூருக்கு அருகே அமைந்துள்ள தொழில்துறை நகரமான ஓசூரில் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப படிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆய்வு, தமிழ்நாடு தலைநகருக்கான இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்குவதற்காக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு தளங்களில் AAI இன் ஆய்வுக்கு ஒப்பானது. பரந்தூர் விமான நிலையத்தின் அதே வேகத்தில் இந்த விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. AAI இதையடுத்து ஆய்வு அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடிவுசெய்துள்ளது.
ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் 27ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதிய விமான நிலையம், இயக்கப்பட்டதும், ஒரே ஓடுபாதையைக் கொண்டிருக்கும். அதன்பின் இரண்டு ஓடுபாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓசூர் விமான நிலையம்: ஓசூரில் உருவாக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு பெங்களூர் முட்டுக்கட்டை போடும் என்று தகவல்கள் வருகின்றன. ஓசூர் ஏர்போர்ட்டுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பெங்களூரில் இரண்டாவது ஏர்போர்ட் அமைக்கும் பணிகளில் கர்நாடகா இறங்கி உள்ளது. இதற்காக இப்போதே இடங்களை கண்டுபிடித்துள்ளது. இதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்கள், துமகுரு சாலை, மைசூர் சாலை, குனிகல் சாலை, கனகபுரா சாலை, தொட்டபல்லாபூர் மற்றும் டோப்ஸ்பேட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஓசூரில் ஏர்போர்ட் அமைப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் விமான நிலையமான BAIL பெங்களூரை சுற்றி ஏர்போர்ட் அமைக்க ஓசி.. அதாவது தடை சான்றிதழ் வாங்கி உள்ளது. அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் மத்திய அரசு பெங்களூரை சுற்றி புதிய விமான நிலையம் அமைக்க வாய்ப்பு கொடுக்காது. இதை பயன்படுத்தி ஓசூரில் விமான நிலையம் அமைக்க பெங்களூர் எதிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த விவகாரம் கணம் பெற்றுள்ளது.
ஓசூர் வளர்ச்சி; தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள், மாவட்டங்கள் பல உள்ளன. உதாரணமாக கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகியவை தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்கள் ஆகும். அதிலும் ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது.
பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்கள் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.