சென்னை: தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றியுள்ளதாக பத்திரிகைகளில் அறிவிப்பு அளித்துள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு பின் மாற்றி உள்ளார்.
யார் இந்த பீலா ராஜேஷ்: சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வெங்கடேசன் ராணி வெங்கடேசன் தம்பதிக்கு மகளாக நவம்பர் 15, 1969 ஆம் ஆண்டு பீலா பிறந்தார். இவருடைய தந்தை எல். என். வெங்கடேசனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். வெங்கடேசன் யார் என்று பார்த்தால், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக (டிஜிபி) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் ராணி வெங்கடேசன், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆகும். ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் யார்.
பீலா பள்ளிப்படிப்பை முடித்த பன்னர் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆனார், அதன்பின்னரே யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஏஸ் அதிகாரியாக மாறினார். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பீலா, ஒடிசாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் அவர் பெயர் பீலா ராஜேஷ் என்ற மாறியது
செங்கல்பட்டு துணை ஆட்சியாராக இருந்த அவர், அதன்பின்னர் தமிழக அரசு துறைகளில் பல்வேறு பணிகளை வகித்து பணியாற்றினார். மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக பணியாற்றி இருக்கிறார். இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனராகவும் பீலா பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தலைகீழாக மாறிப்போன சென்னை! கிரவுண்ட் ஃப்ளோருக்கு வாடகைக்கு ஆள் கிடைக்கல!
கொரோனா காலத்தில் பீலா ராஜேஷ் பணி பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதனிடையே கடந்த நவம்பரில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ், எரிசக்திதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று மாற்றி உள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு பின் மாற்றி உள்ளார். இதேபோல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பீலா என்று மட்டுமே வைத்துள்ளார். திடீரென பெயரை மாற்றியது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
Weather Data Source: Wettervorhersage 21 tage