அரசு மருத்துவமனையில் ஸ்கேனுக்கு ரூ.2500.. அமைச்சர் மா.சு ஆய்

post-img

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டபோது, ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது - தனியார் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வாங்கி கொண்டு பரிசோதனை செய்த்ததால் ஒப்பந்தம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையம் கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் (Krishna Diagnostics) பொது - தனியார் கூட்டில் (PPP Mode) ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. அந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2500 பெற்று பரிசோதனை மேற்கொண்டதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து ஆய்வு செய்தபோது கண்டறிந்தார்.
உடனடியாக அதற்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இன்று ஒரு நாளில் மட்டும் அந்த ஸ்கேன் மையத்தில் பரிசோதனைகள் மேற்கொண்ட 10 பேரில் 7 பேரிடம் ஸ்கேன் மையம் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொருவரிடமும் ரூ.2500 பணம் பெற்றுக்கொண்டு ஸ்கேன் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் நிறுவனம், பொது - தனியார் கூட்டில் (PPP Mode) செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும், தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் தருவிக்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

Related Post