"மதிப்பிற்குரிய ராகுல்".. மெசேஜை அனுப்பிய எடப்பாடி.. புதிய கூட்டணி ரெடி?

post-img

சென்னை: காங்கிரசுடன் இணையும் ஆசை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கலாம். காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி சிக்னல் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரிஷி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், காங்கிரசுடன் இணையும் ஆசை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கலாம். காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி சிக்னல் கொடுக்கலாம். ஆனால் காங்கிரஸ் எடப்பாடி பக்கம் சொல்லவில்லையே? விசிக அப்படி பேசவில்லையே? திருமா எடப்பாடி உடன் நெருக்கம் காட்டவில்லையே. யாருமே எடப்பாடிக்கு ஆதரவாக பேசவில்லையே. அப்படி இருக்க எந்த புள்ளியில் இவர் மெகா கூட்டணி என்கிறார். யாரை வைத்து இவர் மெகா கூட்டணி என்கிறார். பூவை ஜெகன்மூர்த்தி , என் ஆர் தனபாலன் இரண்டு பேர் மட்டும் எடப்பாடி உடன் கூட்டணி வைக்க ரெடியாகி உள்ளன.
கிருஷ்ணசாமி, ஜி கே வாசன் இரண்டு பேருமே பாஜக - அதிமுக வேண்டும் என்று இருக்கிறார்கள். இரண்டு பேருமே அதிமுக - பாஜக சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம் தேமுதிக எங்கே செல்லும் என்று தெரியவில்லை. அவரும் பாஜகவுடன் கொஞ்சம் நெருக்கம் காட்டுகிறார். ஆனால் அதிமுகவுடன் நெருக்கம் காட்டவில்லை. அப்படி இருக்க.. எடப்பாடி பழனிசாமி எப்படி மெகா கூட்டணி அமைப்பார்? யாருடன் மெகா கூட்டணி அமைப்பார்?
காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ எல்லாம் வெற்றி பாதைக்கு திரும்ப திமுக காரணம். மக்கள் நல கூட்டணியில் இருந்து படுதோல்வியை சந்தித்த சிறிய கட்சிகள் மீண்டும் வெற்றிபெற திமுக கூட்டணி காரணம். அப்படி இருக்க இந்த காட்சிகள் எந்த நம்பிக்கையில் திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியே வரும். அதிமுக 2024 தேர்தலை பற்றி நினைக்கவில்லை. 2024ல் ஜீரோ வந்தாலும் பரவாயில்லை. அதனால் பிரச்சனை இல்லை. 2026 தேர்தல்தான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.


இன்னொரு பக்கம் இந்த கூட்டணி முறிவால் பாஜகவிற்கு என்ன இழப்பு? ஒரு இழப்பும் இல்லை? கடந்த நாடாளுமண்ட தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2014ல் 33 சதவிகித வாக்கு வென்ற சிபி ராதாகிருஷ்னன் கடந்த முறை 31 சதவிகித வாக்குகள் மட்டுமே வென்றார். அப்படி இருக்க.. பாஜகவிற்கு அதிமுகவால் என்ன பயன் உள்ளது? அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக எப்படி வெற்றிபெற முடியும். இதுவரை அவர்கள் வெற்றிபெறவில்லையே.


இன்னொரு பக்கம் அதிமுக சில தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கவே திணறுகிறது. அப்படி இருக்க அதிமுகவை - பாஜக எப்படி நம்பும். அதிமுகவிற்காக அண்ணாமலையை எப்படி பாஜக நீக்கும். 2019ல் அதிமுக ஒரு இடத்தில்தான் வென்றது. அதன்பின் வரிசையாக அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. அப்படி இருக்க பாஜக இவர்களுக்காக அண்ணாமலையை எப்படி நீக்கும்? ஓபிஎஸ், டிடிவி இல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பவர் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும், என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

 

Related Post