ஆந்திராவையே அதிர வைத்த கிருஷ்ணவேணி.. 17 வயது சிறுவர்களை வைத்து தம்பிகளுக்கு நடத்திய காரியம்

post-img
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல்நாடு அருகே நகரிகல்லு என்ற கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான போலா ராஜுவின் மகள் கிருஷ்ணவேணி என்பவர் தனது சகோதரர்கள் இருவரையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார். அதுவும் எப்படி என்றால், சிறுவர்களை வைத்து சகோதரரக்ளையும் இருவரையும் போட்டு தள்ளியிருக்கிறார். தந்தையின் பணம் ரூ.70 லட்சத்திற்காக அவர் இந்த காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்ற வந்தார். கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா என்ற மகன்களும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். ஆசிரியர் போலராஜு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். பணியின் போதே உயிரிழந்த காரணத்தால் ஆசிரியர் போலராஜு குடும்பத்திற்கு 70 லட்சம் பணம் அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. அதாவது பிஎப் பணம், அரசின் நிவாரணம், ஓய்வூதிய பலன் ஆகியவை போலராஜு குடும்பத்திற்கு கிடைத்ததால் இந்த 70 லட்சம் பணம் கிடைக்கக உள்ளது. இவருக்கு வீடும் உள்ளது. இந்நிலையில் வீடு மற்றும் 70 லட்சம் பணம், அரசு வேலை ஆகியவற்றை பெறுவதில் 2 மகன்கள் கோபி, ராமகிருஷ்ணா மற்றும் மகள் கிருஷ்ணவேணி இடையே போட்டி ஏற்பட்டது.மூத்த மகன் கோபி போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். எனினும் தந்தையின் அரசுப் பணி மற்றும் அவரது பணம் தனக்கே வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணவேணியும் அவரது தம்பி ராமகிருஷ்ணாவும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்ததால் அவர்களும் தந்தையின் வேலைக்கு போட்டி போட்டி போட்டதுடன், பணத்தையும் பெற விரும்பியுள்ளார்கள். இந்த சூழலில் கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காணாமல் போனார்கள்.. இந்நிலையில் கிருஷ்ணவேணியை பிடித்து போலீசார் விசாரித்த போது, தனது அண்ணன் தம்பி இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதும் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். காவலர் கோபிகிருஷ்ணாவிடம் கடைசியாக பேசியது கிருஷ்ணவேணி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடையே கிருஷ்ணவேணியிடம் அடிக்கடி பேசி வந்த தன்னையா என்ற இளைஞரை பிடித்து விசாரித்தபோது, தான் கிருஷ்ணவேணியின் காதலன் என்றும், தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உளறியுள்ளார். இதனிடையே கிருஷ்ணவேணியை பிடித்து விசாரித்த போது, பணத்திற்காக நவம்பர் 26 ஆம் தேதி தனது தம்பியையும், டிசம்பர் 10 ஆம் தேதி தனது மூத்த சகோதரனையும் கொன்றதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். எப்படி கொன்றார் என்பது போலீசுக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதுபற்றி தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் காதலனுடன் இணைந்து இந்த சதியை அரங்கேற்றியுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் பழகும் 17 வயது சிறுவர்கள் 4 பேரை ஏவி விட்டு அண்ணன் தம்பிகளை கொன்றுள்ளார். அவர்களது உடல்களை கால்வாயில் வீசியுள்ளனர்.அதனை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Post