தென்காசி: தென்காசியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்து ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அருகே விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலி அடைந்து உள்ளனர். தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டு உள்ளது.
காரில் பயணித்த 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி ஆகி உள்ளனர். புளியங்குடி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வேல், மனோஜ் சுப்பிரமணியன், மனோகரன், போத்திராஜ் விபத்தில் உயிரிழந்தனர்.
கார் தென்காசி சாலையில் வேகமாக வந்துள்ளது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி காரை பார்க்காமல் மோதி உள்ளது. இரண்டும் நேருக்கு நேரு வேக்மார்க் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியாகிவிட்டார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடரும் விபத்துகள்; தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது. இந்த வீடியோவின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
கொடூர விபத்து: இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மீண்டும் விபத்து: இந்த நிலையில் நேற்று மாலை அங்கு மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும் நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது56) க/பெ. கார்வின் த.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், . அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல், . ஜெனிபர் (வயது 29) க/பெ. வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தின்படி இரண்டு லேன் களில்.. ஒரு லேனில் ஒரு லாரி, அதன்பின் ஒரு கார் சென்று உள்ளது. இன்னொரு லேனில் ஒரு கார், அதன்பின் இரண்டு லாரி வந்துள்ளது. இதில் இரண்டாவதாக வந்த லாரிதான் விபத்திற்கு காரணம்.
அதைக் சுமை ஏற்றி வந்த அந்த லாரி பிரேக் பிடிக்க முடியாமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற லாரியில் மோதியது. அந்த லாரி அதற்கு இடதுபக்கம் சென்ற லாரியில் மோதி, அதோடு முன்னால் சென்ற காரிலும் மோதியது.இதில் மொத்தமாக அந்த லாரி மற்றும் கார் தண்ணீருக்குள் விழுந்தது. பாலத்தை உடைத்துஉண்டு தண்ணீரில் விழுந்துள்ளது. இப்படித்தான் மொத்த விபத்தும் ஏற்பட்டு உள்ளது. அந்த லாரி அதிக சுமை ஏற்றி வந்து பிரேக் பெயிலியர் ஆனதே விபத்திற்கு காரணம்.