புத்தாண்டு 2025: 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இருக்கப் போகிறோம். புத்தாண்டு பல புதுமைகளைத் தரும் ஆண்டாகப் பிறக்கவுள்ளது. சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேதுப் பெயர்ச்சியால் இந்த ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னவிதமான நற்பலன்களை எல்லாம் பெறப் போகிறார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்...
மாற்றம் ஒன்றே மாறாதது. 2024 ஆம் ஆண்டு விரைவில் நிறைவடையப் போகிறது. புதிய நம்பிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். மே 14 ம் தேதி குரு பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. இது அரிதிலும் அரிதாக நடைபெறும் நிகழ்வு.
கிரகங்களின் பெயர்ச்சியால் 2025 ஆண்டு பயங்கர மாற்றங்களை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். 2025 மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி செய்கிறார். மேஷத்துக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. கும்பத்துக்கு ஏழரை சனி பிரச்னை தீரப்போகிறது. கும்பத்துக்கு லக்னத்தில் சனி இருப்பதால் இவ்வளவு காலம் நிறைய பிரச்னைகள் வந்து படாதபாடு படுத்தியிருக்கும். அதற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது.
முக்கியமாக குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். ரிஷபத்தில் இருக்கும் குரு சுக்கிரன் வீட்டில் இருப்பதால் தற்போது 50 சதவீதம் பலன்களை தான் கொடுக்கும். அதுவே புதனுக்கு மாறுவதால் நிறைய நல்ல மாற்றங்கள் பிறக்கும். தொழில் விருத்தி அடையும். அதனால் நிறைய பேருக்கு நல்லது நடக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக துலாம், கும்பம், மிதுனம் ஆகிய ராசிகளுக்கு வாழ்க்கையிலும், குடும்பத்திலும் நல்ல யோகம் உண்டாகும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் உண்டாகும்.
ரிஷபம், கன்னி, மகரம் ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குருப்பெயர்ச்சியில் விருச்சிகம், மீனம் உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கடகத்துக்கு விரயத்தில் குரு அமர்ந்திருப்பதால் சுப விரயங்கள் இருக்கும். குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
2025 சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசி தொட்டது எல்லாம் வெற்றியாக மாறும். துலாம், மிதுனம் ராசிக்கும் சனிப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். 2025 ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரை ரிஷபம், கன்னி, தனுசு ராசிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். கேது சிம்ம ராசியில் அமர்வதால் அரசியல் தலைவர்களுக்கு உயிர் கண்டம் உள்ளது. தலைவர்களுக்கு அரசியல் சூழ்ச்சி, சட்ட சிக்கல்கள், அவப்பெயர்கள் உண்டாகும்.
லாப ஸ்தானத்துக்கு 11வது இடத்தில் அமர்வதால் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளரும். அன்றாட தேவைக்கு அத்தியாவசியமான பெரும்பாலானவை டிஜிட்டல் மயமாகும். மதபோதகர்களுக்கும் கண்டம் உள்ளது. 2025 மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி மே 19ம் தேதியில் ஐந்து கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும். நீட்சம் பெற்றுள்ள செவ்வாய் கடகத்தில் இருப்பதாலும், முக்கியமான நான்கு கிரகங்கள் மீனத்தில் அமர்வதாலும் நிறைய பிரச்னைகள் வரும்.
அமெரிக்காவில் அதிருபருக்கு உயிர் கண்டம் உள்ளது. போர் மூழ்வதற்கும் வாய்ப்புள்ளது. சனி 12வது இடத்தில் அமர்வதால் நிதியில் தடை தாமதம் ஏற்படும். குழந்தை பிறப்பு விகிதம் குறையும். சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. மக்களுக்கு உயிர் பயம் அதிகமாகும். வெளிநாட்டில் சென்று செட்டிலாபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
வங்கி, தபால் துறைகளில் புதிய சாதனைகள் நடைபெறும். தொழில்நுட்பத்தை போல ஊடகத்திலும் பெரிய முன்னேற்றம் இருக்கும். மழை, பூகம்பம் இயற்கையானது. சனி 12 வது இடத்தில் அமர்வதால் நிலச்சரிவுடன் ஆங்காங்கே தீ விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage