அதிபர் தேர்தல்.. என்னை வெற்றி பெற வைக்காவிட்டால்.. ரத்தக்களறி ஏற்படும்.

post-img

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்குகிறார். இந்த நிலையில், "என்னை வெற்றி பெற வைக்காவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று டொனால்டு டிரம்ப் ஆவேசமாக பேசினார்.

உலக வல்லரசான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இரு கட்சி ஆட்சிமுறையை கொண்ட அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் அதிபர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தற்போது ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது.

இதனால், அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதேபோல், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார்.

ரத்தக்களறி ஏற்படும்: ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராவதற்கு, 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2,099 பேரின் ஆதரவு ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. குடியரசு கட்சியில் 1,215 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 1,228 பேரின் ஆதரவுகளை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அதிபர் பதவிக்கான ரேஸ் தொடங்கியுள்ளது.

கனடாவில் இந்திய குடும்பம் எரித்து கொலை.. 16 வயது மகளும் துடிதுடித்து பலி! அதிர வைக்கும் தகவல்கள் டொனால்டு டிரம்ப் தற்போதே தனது வழக்கமான ஸ்டைலில் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிட்ரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார். டொனால்டு டிரம்ப் பேசுகையில், "அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும்.

எதற்காக அப்படி பேசினார்: தன்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தகளறி ஏற்படும்” என்றார். ஆனால் எதற்காக இப்படி டிரம்ப் பேசினார் என்பது குறித்து தெளிவாக அவர் சொல்லவில்லை. அமெரிக்காவின் ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும் போது இவ்வாறு டிரம்ப் கூறியதால், அது பற்றி பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Related Post