புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்டிஆர் ராமச்சந்திரன் காலமானார்.. சென்னையில் பிரிந்த உயிர்

post-img

புதுச்சேரி: புதுச்சேரி திமுக முன்னாள் முதலமைச்சர் எம்டிஆர் ராமச்சந்திரன் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
புதுச்சேரியை சேர்ந்த மூத்த அரசியல்வாதியாக இருந்தவர் எம்டிஆர் ராமச்சந்திரன். இவர் திமுக சார்பில் 2 முறை புதுச்சேரி முதல்வராக இருந்தார்.

அதாவது 1980 - 1983 வரை முதல் முறையாகவும், அதன்பிறகு 1990-1991 வரை 2வது முறையாக திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை புதுச்சேரி சட்டசபை சபாநாயகராவும் காங்கிரஸ் சார்பில் இருந்தார். தற்போது எம்டிஆர் ராமச்சந்திரனுக்கு 93 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தான் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் எம்டிஆர் ராமச்சந்திரன் பாதிக்கப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி எம்டிஆர் ராமச்சந்திரன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Post