டெல்லி: ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார். அவருக்கு வயது 89. ஏழு முறை எம்எல்ஏவான ஓம் பிரகாஷ் சௌதாலா, 4 முறை ஹரியானா மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ஓம் பிரகாஷ் சௌதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான இவர், இதுவரை ஏழு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
1989ம் ஆண்டு முதல்முறையாக ஹரியானா மாநில முதல்வராகப் பதவியேற்ற இவர், மொத்தம் 4 முறை அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். 89 வயதான இவர் வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுக்கி இருந்தார்.
குருகிராமில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று திடீரென காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு வயது 89.