கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 7ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தற்போது மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக பள்ளிகள் 7ம் தேதி திறப்பதாக இருந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார்.
கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி கல்வித்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
அதன்பின் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.
பள்ளிகள் திறப்பு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கடந்த வாரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பல்வேறு பகுதிகளுக்கு இடையில் சிறப்பு பேருந்து சேவை வழங்கப்பட்டது. கடந்த 5-6 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேதாரண்யம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் பகுதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேதாரண்யம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு திருச்சியில் இருந்தும்.. இதே பகுதிகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 4 மற்றும் 5ஆம் தேதி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு சென்ற மாணவ, மாணவியர் வீடு திரும்பும் வகையில் இன்றில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
முக்கிய உத்தரவு: இந்த நிலையில் பள்ளிகள் தற்போது மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் இந்த வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டால் இதுவரை ஊருக்கு செல்லாத மக்கள் சொந்த ஊருக்கு செல்ல.. முக்கியமாக பெற்றோர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.