சென்னை: இன்ஸ்டாகிராமில் அதிகமாக ரிலீஸ் பார்க்கும் 'ஜொள்ளு' ஆண்களை குறி வைத்து புதுவகை மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. அரைகுறை ஆடைகளுடன் ரீல்ஸ் செய்யும் வீடியோக்களை லைக் செய்யும் நபர்களுக்கு, அவர்களுடன் வீடியோ காலில் பேசலாம் என கூறி பணம் பறிப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.
ஆரம்பத்தில் இருவருக்கிடையேயான உரையாடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள்
எஸ்எம்எஸ், எம்எம்எஸ் தொடங்கி தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் வீடியோ கால் வரை வந்திருக்கிறது.
பேஸ்புக், வாட்ஸ் ஆப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. சாட்டிங் -ல் தொடங்கி வீடியோ கால் வரை இந்த அப்ளிகேஷன்களில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டுள்ளாம்.
மேலும் அனைத்து வகையான சமூக வலைதளங்களிலும் ரீல்ஸ் எனப்படும் குறு வீடியோக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆரம்பத்தில் திறமைகளை வெளிப்படுத்து வந்த சிலர் தற்போது ஆபாசத்திற்கு மாறி இருக்கின்றனர்.
அரைகுறை ஆடைகளுடன் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் பேசி தங்களுக்கு லைக் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். 30 செகண்டுக்குள் வீடியோக்கள் இருப்பதால் ஆரம்பத்தில் மணித்துளைகளை செலவிட்ட பலர், தற்போது மணி கணக்கில் வீடியோக்கள் பார்த்து வருகின்றனர். சிலரோ அரைகுறை ஆடைகளுடன் ஆடுபவர்களுக்கு லைக் போட்டு கமெண்ட் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நபர்களை குறி வைத்து மோசடி ஒன்று அரங்கேறி வருவதாகவும் எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார். மேலும் டேட்டிங் செயலிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் இடமாக ரீல்ஸ் வீடியோக்களை பயன்படுத்தி வருகிறது. "நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா? வாழ்க்கை போரடிக்கிறதா உங்களுக்காக இந்த அப்ளிகேஷன்.. உடனே டவுன்லோட் செய்யுங்கள்" எனக் கூறி அவர்களது தனிப்பட்ட தகவல்களை திருடி காசு பார்க்கின்றனர். இந்நிலையில் வட மாநில பெண்கள், பிரபல இன்ஸ்டாகிராம் இன்புளுன்ஸர்களை பயன்படுத்தி தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது.
எவ்வளவு நாள் தான் வீடியோக்களை மட்டுமே பார்ப்பது, அவர்களுடன் பேச வேண்டாமா என வலை விரித்து 100 ரூபாய்க்கு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் அவர்களுடன் அரை மணி நேரம் வீடியோ காலில் பேசலாம் என குறிவைக்கின்றனர். அவ்வாறு சபல எண்ணத்தோடு அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது.'
அது மட்டுமல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் வீடியோ காலில் பேசும்போது அவர்களையும் அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வேறு சில ஆபாச வீடியோக்களுடன் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர். மேலும் தன்னுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தை ஃபாலோ செய்தால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவதாகவும் ஆண்களே பெண்கள் போல பேசி ஏமாற்றி வருகின்றனர்.
எனவே இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் சிக்காமல் இருக்க வேண்டும் என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார். மேலும் போலீசாரும் இதுபோன்ற சமூக வலைதள கணக்குகளை கண்காணித்து அவற்றை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage