பெங்களூர்: பெங்களூரில் திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தைகள் கூறி 20 வயது இளம்பெண்ணுடன் டேட்டிங் உள்பட பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்த 22 வயது வாலிபர் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி ரூ.2.57 கோடி மிரட்டி பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவருக்கு வயது 22. இவருடன் உறைவிட பள்ளியில் தங்கி படித்தவர் 20 வயது இளம்பெண். ஒரே பள்ளியில் படித்ததால் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
பள்ளி படிப்பை முடித்த பிறகு இருவரும் வேறுவேறு கல்லூரிக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது.
அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இருவருக்குமு் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து டேட்டிங் சென்றனர். அதேபோல் வெவ்வேறு இடங்களுக்கு இருவரும் சுற்றுலா சென்றனர். இந்த வேளையில் மோகன் குமார், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். நட்பாக இருந்த இருவரும் காதலர்களாக உலா வந்தனர்.
இந்த சமயத்தில் மோகன் குமார், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் நெருக்கமாக இருப்பதை போட்டோ மற்றும் வீடியோவாக அவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த போட்டோ, வீடியோவை யாருக்கும் அனுப்ப மாட்டேன். நானே பத்திரமாக வைத்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தான் தற்போது அந்த வீடியோ, போட்டோவை வைத்து மோகன் குமார் தனது காதலியை மிரட்ட தொடங்கி உள்ளார். தனக்கு தேவையான பணத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச போட்டோ, வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றுமிரட்டி உள்ளார். இந்த மிரட்டலால் பயந்துபோன அவரது காதலி தனது பாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.25 கோடியை மோகன் குமாரின் வங்கி கணக்கிற்கு மாற்ம் செய்துள்ளார்.
அதன்பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.1.32 கோடி பணத்தை மோகன் குமாரிடம் வழங்கி உள்ளார். இப்படியாக அவர் மொத்தம் 2.57 கோடியை மோகன் குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனாலும் மோகன் குமார் விடவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த பெண் சம்பவம் குறித்து பெங்களூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage