நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வார்களே ஒழிய.. ! இஸ்லாமியர்கள் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு

post-img
திருச்சி: இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொன்னாலும் நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வாங்களே ஒழிய இஸ்லாமிய மக்கள் எங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்திற்கே கருணாநிதி நாடு என பெயரை மாற்றிவிடலாம். கழிப்பிடம், குடிப்பிடத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் கருணாநிதி பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வேறு எந்த இடத்திற்கும் பெயர் வைக்க கருணாநிதியை தவிர தகுதி பெற்றவர்கள இல்லையா. ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? ஜல்லிக்கட்டு வளாகத்திற்கும் அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் எனக்கு எப்போதுமே ஓட்டு போட்டதில்லை. இதை என் தலைவர் மீது ஆணையிட்டு சொல்கிறேன். இனியும் போடுவார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக திமுகவுக்கு ஓட்டு போடுவது என வைத்துள்ளார்கள். இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்றால் கூட நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வார்களே ஒழிய திமுகவுக்கு ஓட்டு போடாமல் இருக்க மாட்டார்கள். கேட்டால் நான் பாஜகவின் பி டீமாம். திமுக பாஜகவின் ஏ டீம் என்பதால்தான் என்னை பி டீம் என்கிறார்கள். அதிமுகவை கண்டு கூட திமுக அஞ்சுவதில்லை, ஆனால் என்னை பார்த்து திமுக பயப்படுகிறது. நாங்கள் ஓட்டு பிச்சை எடுப்பதாக அண்ணாமலை சொல்கிறார். ஆனால் அவர் பிச்சி பிச்சி எடுக்கிறார். இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர ஆர்எஸ்எஸுக்கு ஒரு கொள்கை கோட்பாடு இருக்கா, சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்குமாறு மத்திய அரசை அண்ணாமலை வலியுறுத்துவாரா என சீமான் கேள்வி எழுப்பினார். கோவை பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் சீமானும் திருமாவளவனும் கலந்து கொண்டு ஓட்டு பிச்சை வாங்குவதில் பிஎச்டி வாங்கியுள்ளனர் என அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post