2024ல்.. ஒரே வருடத்தில் உச்சம் அடைந்த கோயம்புத்தூர்.. எத்தனை வருட ஏக்கம்.. இனி கோவைனா கெத்து!

post-img
கோயம்புத்தூர்: 2024ம் ஆண்டு முழுக்க கோவைக்கு என்று பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூர் தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முழுக்க கோவைக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்.. கோவையை நோக்கி வந்த பெரிய முதலீடுகள்.. கோவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். கோவையில் அமைய உள்ள பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா சாலையில், ஜெமினி பாலம் கீழே அமைந்து இருக்கிறது. இதற்கு தினமும் நூற்றுக்கணக்கில் மக்களும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு. இந்த பூங்கா கடந்த 2010ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த பூங்கா, அந்த பகுதியில் இருந்த தனியார் ஹோட்டலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி, இந்த பூங்கைவை அமைத்தது. சிறைச்சாலை மைதானத்தில் முதற்கட்டமாக செம்மொழிப் பூங்காவுக்கான பணிகள் இந்த மாதம் தொடங்கும் என கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தெரிவித்துள்ளார். பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள 165 ஏக்கர் சிறை மைதானத்தில் பூங்கா கட்டம் வாரியாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோவை மத்திய சிறைச்சாலையில் பயன்படுத்தப்படாத 45 ஏக்கர் நிலம் பகுதியில் இந்த பூங்கா அமைய உள்ளது. 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கடந்த ஜூன் 28ம் தேதி பூங்காவுக்கான டெண்டர் திறக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான எக்ஸ்பிரஸ் வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது. வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், டிபிஆர் தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் குழு ஒன்று கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்கு பலமுறை சென்று டிபிஆர் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. டிபிஆர் தயாரிக்கும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக் வாய்ப்புள்ளது. இது பின்னர் NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும். இது ஆறு வழி நெடுஞ்சாலையாக இருக்கும். அதேபோல் தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் சாலைகள் இருக்கும். மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எல் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. குறுகலான எல் அண்ட் டி பைபாஸ் சாலையை நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை (27.2 கிமீ) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு (MoRTH) தமிழ்நாடு அரசு திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தொப்பூர் கணவாய் பகுதிக்கு இணையாக இங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் இங்கே 120 வாகன ஓட்டிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. 2 வழி சாலையாக இது இருந்தாலும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலால் மிகவும் குறுகலாக உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையை நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை (27.2 கிமீ) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இங்கே போக்குவரத்து நெரிசல் குறையும். பிரபல ஐடி நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. KGISL SEZ இல் ~300 பேருக்கு ஆரம்ப வேலை வாய்ப்புடன் புதிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கோவையில் ஐடி புரட்சி நடக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது கோவைக்கு உள்ளேயும் மாநகராட்சி சாலை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. அதோடு இல்லாமல் கோவை டைடல் பார்க் பகுதிகளை அழகுபடுத்தும் வேலைகள் தொடங்கி உள்ளன. நியுயார்க் ஐடி பார்க் ஸ்டைலில் இங்கே இருக்கும் சாலைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. சாலைக்கு நடுவே பூங்கா அமைக்கவும், சாலை ஓரங்களை அழகு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கோவையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக கோயம்புத்தூரில் தமிழ்நாடு டெக் சிட்டியை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இதற்கான 3 முக்கியமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. நிலம் கண்டுபிடிப்பது, சந்தை மற்றும் தேவை பகுப்பாய்வு , நிதி ஆய்வு ஆகிய 3 நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 321 ஏக்கர் பரப்பளவில் PPP முறையில் TN டெக் சிட்டிக்கான விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஏலங்களை ELCOT வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கட்டுமானம் தொடங்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் .ஐடி பூங்கா தவிர்த்து கோவையில் தனியாக இன்னொரு தொழிற்பூங்கா அமைக்கப்படும். என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூரில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கான அடிப்படை கட்டுமானங்கள் அங்கே நடந்து வருகின்றன. கோயம்புத்தூர் வாரப்பட்டியில் தனது முதல் சிப்காட் தொழில் பூங்கா (பாதுகாப்பு) அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் மொத்த பரப்பு : 372.7 ஏக்கர். இதற்கான மொத்த செலவு : 293 கோடி ரூபாய். தற்போது 373 ஏக்கர் பரப்பளவுள்ள வரப்பட்டி பாதுகாப்பு பூங்காவிற்கு சாலைகள், தண்ணீர் மற்றும் தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கு சிப்காட் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதற்கான பணிகள் நடக்க உள்ளன. கோவையில் பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான 'தி ஃபீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட்' கோவையில் முதலீடு செய்ய உள்ளது. ஃபீனிக்ஸ் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, தற்போது அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் 10 மால்கள் இயங்கி வருகின்றன. அதோடு இந்தியா முழுவதும் 3 மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஒரு மால் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே லுலு மால் ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ளது. லுலு மால் கோயம்புத்தூர் கிட்டத்தட்ட 1.1 லட்சம் சதுர அடி இடத்தைக் கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஆகும். இந்த மால் லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமானது. அங்கு உள்ள இரண்டு வணிக வளாகங்களில் ரூ.2,500 கோடியும், உணவு பதப்படுத்தும் பிரிவில் ரூ.1,000 கோடியும் முதலீடு செய்ய உள்ளது. இந்த மால் 14 ஜூன் 2023 அன்று திறக்கப்பட்டது. இப்படி கோவையில் பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. கோயம்புத்தூரில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்ய மாநில அரசு டெண்டர் விடுத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேம்பாட்டிற்கான டிபிஆர் தயாரிப்பதற்கும் வடிவமைப்பு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கும் டெண்டர் முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்நிலை விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே அமைய போகும் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். ஏலதாரர்கள் ஒரு மாதத்திற்குள் ஏலத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சேலத்தையும் கொச்சியையும் இணைக்கும் NH 544 இல் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநில சிறைத்துறையிடம் 200 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் 198 ஏக்கர் டிபிஆர் தயாரிப்பு முடிந்ததும் மைதானத்திற்காக கையகப்படுத்தப்படும். தமிழ்நாடு விளையாட்டுத் துறையானது நாட்டிலேயே மிகப்பெரிய பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த அரங்கத்தை நிர்மாணிக்க உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை விட பெரிய மைதானமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் இதை கட்ட உள்ளனர். இப்படி மற்ற நகரங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில்தான் கோவையில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. நல்ல கிளைமேட், நல்ல தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால் கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. அந்த வகையில் கோவையில் மேற்கொள்ளப்படும் ஐடி முதலீடுகள் தொடர்பான முக்கியமான 3 அறிவிப்புகள் நேற்று வெளியாகின. சம்பவம் 1: அதன்படி ஆம்பர் குழுமம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் நிறுவனம் கோவையில் புதிய அலுவலகத்தை விரைவில் திறக்கவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அங்கே நடக்க உள்ளது. 15 மாடி கட்டிடமாக அங்கே இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. சம்பவம் 2: மேலும் கோயம்புத்தூரில் உள்ள Wynfra சைபர்சிட்டி அமைக்கப்பட உள்ளது. ~1.92 மில்லியன் சதுர அடி கொண்ட ஐடி பார்க் இதன் மூலம் அங்கே அமைக்கப்படும். நகரின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப திட்டங்களில் ஒன்றாக இது அமையும். தற்போது கோவையில் இருக்கும் ஐடி பார்க்குகளை விட பெரிதாக.. மிகப்பெரிய அளவில் இந்த ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பிரம்மாண்ட வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. கோவையின் மிகப்பெரிய ஐடி பார்க்காக மட்டுமன்றி.. அதிக சர்வீசுகளை மேற்கொள்ளும் ஐடி பார்க்காக இது உருவெடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மூலம் பீனிக்ஸ் மால் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி கோவையில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் நிலையில் கோவை விரைவில் ஹைதராபாத், பெங்களூரை முந்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Related Post