சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் நேற்றைய எபிசோடில் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றி வைக்கப்பட்டிருக்கிறார்.
சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்சன்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர்.
இந்த நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் சில தகவல்கள் பரவி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் பிரபலத்தை பிடித்து இருப்பது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் அறிமுகம் ஆகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மீடியா மற்றும் சின்னத்திரை, சினிமாத்துறை என பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போதைய ஏழாவது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதை தொடர்ந்து ஐந்து போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு இருந்தனர்.
இப்போது ஐந்து போட்டியாளர்கள் உள்ளே வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசன் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர்களுடைய கருத்து கேட்கப்பட்டிருந்தது.
சக போட்டியாளர்கள் கொடுத்த அடுத்த அடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார். அதோடு ஏற்கனவே கடந்த சீசனில் இந்த மாதிரி விளையாடி ஜெயித்தது போல இப்போதும் அதையே பாலோ பண்ணி ஜெயித்து விடலாம் என்று நினைத்தால் அது தவறு. மக்கள் எப்போதும் ஒரே ரசனையில் இருக்க மாட்டார்கள்.
இந்த வருடம் தீபாவளிக்கு எடுத்த டிரஸ் அடுத்த வருடம் பிடிக்காது, அதுபோலத்தான் என்று விளக்கமும் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் பிரதீப் தரப்பில் அவருடைய கருத்துக்களை பெரிய அளவில் கேட்கவில்லை என்று ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேறியது ஒரு பக்கத்தில் சரியான முடிவு என்றும் இன்னொரு பக்கத்தில் பல ரசிகர்களும் பிரபலங்களும் இது தவறான முடிவு என்றும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படியாக இருக்கும் வகையில் பிரதீப்புக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும் வீட்டிற்குள் இருந்த நாள் வரைக்கும் சேர்த்து அவருக்கு ஆறு லட்சத்து 80 ஆயிரம் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த பணம் உடனடியாக அவருடைய கைக்கு சேராது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பணம் உடனே வழங்கப்படுவதில்லை காரணம் ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகள் எல்லாம் முடிவடைந்து சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து கூட கிடைத்திருப்பதாக பல பிரபலங்கள் ஏற்கனவே கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது ரெட் கார்டு வாங்கிக் கொண்டு போய் இருக்கும் பிரதீப்புக்கும் இந்த பணம் உடனடியாக கையில் சேராது.
இவர் இந்த சீசனில் டைட்டில் வின்னராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதையே நம்பித்தான் பிரதீப்பூம் உள்ளே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் அவர் இப்போ எந்த பணமும் கையில் இல்லாமல் வெளியே சென்று இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தொடர்ச்சியாக நேற்று இரவில் இருந்து கருத்துக்களும் மீம்ஸ்களும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நீங்கள் பிரதீப் வெளியேற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் தெரிவிக்கலாம்.