ஆஹா.. மொத்தமாக பிரகாஷ் ராஜ் மேல பாய்ந்து விட்டாங்களே! பறக்கும் புது மீம்ஸ்கள்

post-img

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சந்திரயான் 3 விண்கலம் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்து, சந்திரனின் புகைப்படங்களை அனுப்பியது. இது ஊடகங்களில் முக்கிய செய்தியாக வந்த நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"பிரேக்கிங் நியூஸ்: நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய முதல் படம்" என்று குறிப்பிட்டு ஒருவர் தேநீர் ஆற்றும் கார்ட்டூன் படத்தை அவர் பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள். அவருக்கு எதிராக ட்விட்டரிலும் அதிகளவில் மீம்கள் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி ட்விட்டரில் விளக்கமளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு என்பது எப்போது வெறுப்பை மட்டுமே பார்க்கும். நான் ஆர்ம்ஸ்டிராங் டைம்ஸின் ஜோக்கைதான் சுட்டிக்காட்டினேன்.

நமது கேரளா தேநீர் வியாபாரியை கொண்டாடுகிறோம். எந்த தேநீர் வியாபாரி டிரோல்களை பார்த்தது. இந்த ஜோக்கை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், இந்த ஜோக் உங்களை பற்றியதாகும். வளருங்கள்." என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனையை படைத்து உள்ளது.

ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா படைத்த இந்த சாதனையை இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு சினிமா, அரசியல், விளையாட்டு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு தரப்பு மட்டும் 3 நாட்களுக்கு முன் கார்ட்டூன் வெளியிட்ட பிரகாஷ் ராஜ்ஜை விமர்சித்து வருகிறது.

மற்ற பிரபலங்களைபோல் ட்விட்டரில் சந்திரயான் 3 வெற்றியை வாழ்த்தி பதிவிட்ட பிரகாஷ் ராஜ், "இந்தியாவுக்கும் மனித நேயத்துக்கும் பெருமைமிகு தருணம். இஸ்ரோ, சந்திரயான் 3, விக்ரம் லேண்டர் மற்றும் இது நிறைவேற உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை அறியவும், கொண்டாடவும் இது உதவட்டும்." என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவின் கமெண்டில் பலரும் அவரை கலாய்த்து வருகிறார்கள். "சரண்டர் ஆகிவிட்டீர்களா சார்.. ரைட்டு" என ஒருவர் பதிவிட்டு உள்ளார். பிரகாஷ் உடல் முழுவதும் சேற்றை பூசிய படத்தை போட்டும் விமர்சித்து உள்ளார்கள். சந்திரயான் வென்றவுடன் அவரது டயலாக்கான "ஹாய் செல்லம்" என குறிப்பிட்டு கலாய்த்து உள்ளார்கள்.

பர்னால் விளம்பரத்தை குறிப்பிட்டு உனக்காக ஜோக்கர் என ஒருவர் விமர்சித்து உள்ளார். ஒரு படத்தில் பிரகாஷ் ராஜ் கதறி அழும் வீடியோவை பதிவிட்டு இது உங்களின் நேர்மையான ரியாக்சன் என ஒருவர் விமர்சித்து உள்ளார். முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு வாழ்த்து சொல்லுங்கள் என மற்றொரு ட்விட்டர் பதிவாளர் குறிப்பிட்டு உள்ளார்.

Related Post