சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் வரி மாற்றங்கள் காராணமாக நாம் பயன்படுத்தும் பழைய வண்டிகளை விற்கலாமா.. அப்படி விற்றால் அதற்கு ஜிஎஸ்டி உண்டா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி விதிகள் என்ன சொல்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் பல வரி முறைகளை மாற்றி உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு செய்யப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
Image : AI created
பயன்படுத்திய கார்கள், பயன்படுத்திய EVகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்: GST கவுன்சில் புதிய EV களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் பயன்படுத்திய கார்களின் வரி விகிதத்தை தற்போதைய 12% இல் இருந்து 18% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இருப்பினும், இது வணிக நிறுவனங்களால் விற்கப்படும் கார்களுக்கு மட்டுமே. தனிநபர்கள் ஜிஎஸ்டி இல்லாமல் இதுபோன்ற பயன்படுத்திய கார்களை விற்கலாம்.
இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
விளக்கம்:
1. இப்போது நீங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை 3 வருடத்திற்க்கு முன் வாங்கி உள்ளீர்கள்.
2. இன்று 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் என்றால் அதற்கு 18 லட்சம் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். ஆனால் நீங்கள் தனி நபர் என்பதால் உங்களுக்கு வரி கிடையாது.
3. அதுவே நீங்கள் 7 லட்சத்திற்கு ஒரு 2ம் வாகன செல்லரிடம் கொடுக்கிறீர்கள் என்றாலும் உங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை.
4. இப்போது .. அந்த செல்லர் கண்டிப்பாக லாபம் வைத்தே விற்பார். அவர் 8 லட்சத்திற்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
5. அந்த 1 லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதாவது ஒரு லட்சத்திற்கு 18%. அதாவது 18000 ரூபாய் வரி விதிக்கப்படும்.
6. நீங்கள் செல்லரிடம் விற்றாலும் கூட உங்களுக்கு வரி கிடையாது. இது வணிக நிறுவனங்களால் விற்கப்படும் கார்களுக்கு மட்டுமே. தனிநபர்கள் ஜிஎஸ்டி இல்லாமல் இதுபோன்ற பயன்படுத்திய கார்களை விற்கலாம்.
விரைவில் மாற்றம்: ஜிஎஸ்டி யில் வரும் ஜனவரி மாதம் மேலும் மாற்றங்கள் வரப்போகிறது. ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக ஜிஓஎம் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளை மறுசீரமைக்க பரிந்துரைத்து உள்ளது. புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு தற்போதுள்ள 28 சதவீதத்திற்கு (இழப்பீட்டு செஸ் தவிர்த்து) பதிலாக 35 வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவும் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஜவுளிப் பொருட்களுக்கான விலை ₹1,500 வரை இருந்தால் அதற்கு 5% வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதன் மாற்றம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ₹1,500 முதல் ₹10,000 வரை விலையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்க முன்மொழியப்பட்டு உள்ளது. ₹10,000க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கு, 28 சதவீதமாக வரி விதிக்க விதி கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் மாற்றம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இப்போது பொங்கலுக்கு உடை எடுப்பதில் கூடுதல் வரி இருக்காது. ஆனால்.. ஜனவரி இறுதி நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.