பன்னீர் முந்திரி புலாவ் டூ கல்கத்தா பீடா வரை! திமுக செயற்குழு கூட்டத்தில் மதிய உணவு! வெஜ்தான்

post-img
சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு இன்று மதிய உணவு என்னென்ன வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். மொத்தம் 800 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது. சைவ உணவே வழங்கப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலஸின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து – அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம், ஃபெஞ்சல் புயலில் முன்கள வீரராக நின்று மக்களைக் காப்பாற்றிய கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு, ஒன்றிய அரசே! ஃபெஞ்சல் புயல் பேரிடர் நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்கிடுக! ஜனநாயகத்தையும் – “நேர்மையான, சுதந்திரமான” தேர்தலையும் தகர்க்க நினைக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிடுக! டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபட நாடகத்திற்கு செயற்குழு கண்டனம்! கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கடும் கண்டனம். “வைக்கம் நூற்றாண்டு விழா” “குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதி பாகுபாடற்ற “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள திராவிட மாடல் அரசுக்கு பாராட்டும் – வாழ்த்தும்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி சமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன் கொண்டாடுவோம். தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாடுவோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 மட்டுமல்ல – 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும் – சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனே விடுதலை செய்திடுக! என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுடச்சுட மதிய உணவு பரிமாறப்படுகிறது. காலை 10 மணிக்கு 800 பேருக்கு பில்டர் காபி, டீ கொடுக்கப்பட்டது. மதிய உணவு 800 பேருக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மெனு என்பதை பார்க்கலாம். உள்ளிட்டவை மதிய உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

Related Post