டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்த மசோதா அடுத்த வாராம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றும் பலம் பாஜக கூட்டணிக்கு உள்ளதா? மசோதா நிறைவேறிய பிறகு அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை (one nation one election explained) இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆகும் காலத்திற்கு ஏற்ப தேர்தல் நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: இதனால், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனக் கூறிய மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நடப்பு நடாளுமன்ற குளிர் கால கூட்டத்த்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன? அதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
என்னென்ன சாதகங்கள்:
* ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவீனம் குறைவதோடு வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்று வாதிடப்படுகிறது.
* கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்த 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஆனது.
* தேர்தல் நடைமுறை பணிகள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் என பல்வேறு செலவுகளும் இதில் அடங்கும்.
* இதேபோல மாநில சட்டமன்றங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் போது கணிசமான தொகை செலவு ஆகிறது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்றால் இந்த செலவீனங்கள் கணிசமாக குறையும் என வாதம் வைக்கப்படுகிறது.
* நாட்டில் 1951-52 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்த்திற்கும் ஒரே மாதிரியாகத்தான் தேர்தல் நடைபெற்று வந்தது.
* தொங்கு சட்ட சபை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்தது போன்ற காரணங்களால் பதவிக்காலத்திற்கு ஏற்ப பிறகு தேர்தல் நடத்தப்பட்டது.
* ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் வாக்குப்பதிவு சதவிகிதம் குறையும், மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படாது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படாலும், மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்யும், பிராந்திய கட்சிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் போன்ற வாதங்கள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சவால்கள்:
* ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு சாதக பாதக அம்சங்கள் கூறப்படாலும், இதை அமல்படுத்துவதில் பல சாவல்கள் உள்ளன.
* ஒரே நாடு ஒரே சட்டத்தை அமல்படுத்த அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.
* நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால்தான் இதை நிறைவேற்ற முடியும்.
* அது மட்டும் இன்றி நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
* அரசியல் அமைப்பு சட்டம் ஆர்டிகிள் 83, 85(2)b, 174, (2) (B), 356 மற்றும் 75(3) ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டும். மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951-ளிம் முக்கிய திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
* அதுமட்டும் இன்றி நாடு முழுக்க ஒரே நேரத்த்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமளவில் தேவைப்படும். பாதுகாவலர்கள் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்படும். இதுபோன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
நிறைவேற வாய்ப்பு இருக்கிறதா?:
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த மசோதா நிறைவேறி எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதய பாஜக கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பது கவனிக்க வேண்டியது.