மிகப் பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தார்.
நடிகை மாளவிகா மோகனன் : இதையடுத்து, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படத்தின் நடிகர் மேத்யூ தாமஸ் இணைந்து நடித்திருந்தார். தன்னை விட சிறு வயதுடையவனை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்திருந்தார்.
தங்கலான் : தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க வயல்களில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீரியட் திரைப்படமான இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோடு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில் தயாரித்து வருகிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு : இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்த இப்படத்தின் மீதான எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்து வந்த நிலையில், விக்ரமனின் பிறந்த நாளுக்கு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
என்ன மாலு இதெல்லாம் : இப்படத்தில், நடிகை மாளவிகா மோகன் நடித்து வருவதால், இப்படத்திற்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து வருகிறார். இப்படத்திற்காக தனக்கு பிடித்தமான உணவான பிரியாணியை விட்டுவிட்டு, விரும்பிய தோற்றத்தை பெற கடினமாக பயிற்சி செய்து வருகிறார். எலும்பும் தோலுமாக இருக்கும் மாளவிகா மோகனின் போட்டோவை பார்த்து என்ன மாலு இதெல்லாம் என கேட்டு வருகின்றனர்.