சென்னை: காலையில் பழங்களை சாப்பிடலாமா? வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? எல்லா பழங்களையுமே வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
காலை உணவாக பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.. ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடுவது, அந்த அளவுக்கு உடல்நலத்துக்கு ஆரோக்கியமில்லை என்றும் சொல்கிறார்கள்.
பழங்கள்: பழங்களை சாப்பிடுவதானால், காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாகவே சாப்பிடலாம். அதாவது, பைன்ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிக்காய், மாம்பழம், பப்பாளி, ஆப்பிள் இப்படியான பழங்களை சாப்பிடலாம்.
காலையிலேயே சாப்பிட்டுவிட்டால், நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.. ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் முழுமையாக கிடைக்கும்.. சீரான செரிமானம் நடைபெறும். மதிய உணவுக்கு முன்பு, பழங்களை சாப்பிட்டாலும் நல்லதுதான். இதனால் உடல் எடை குறைய துவங்கும்..
நார்ச்சத்துக்கள்: ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக, பழங்களாகவே சாப்பிடும்போது, நார்ச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கின்றன.. ஆனால், உணவுடன் சேர்த்து பழங்களை சாப்பிடவே கூடாது. அப்படி சாப்பிட்டால், செரிமானம் தடைபட்டுவிடும். அதுமட்டுமல்ல, காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி வகைகளுடன் சேர்த்தும் பழங்களை சாப்பிடக்கூடாதாம். இதனால், அவை நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும் என்கிறார்கள்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், சளி, இருமல், அலர்ஜி, ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். மலச்சிக்கல், சரும வறட்சி, வறண்ட கூந்தல், செரிமான கோளாறு போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள், வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடலாமாம்.
தர்பூசணி: அதேபோல, காலை நேரத்தில், அதாவது வெறும் வயிற்றில் 6 பழங்களை மட்டும்தான் சாப்பிட வேண்டுமாம். அதில் முக்கியமானது தர்பூசணி பழமாகும்.. தண்ணீர்ச்சத்து நிறைந்த இந்த பழம், இதயம், கண்களுக்கு நன்மை தரக்கூடியது.. குறைந்த அளவு கலோரிகள் உடையது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காலையிலேயே இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.
பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், முழு சக்தியும் கிடைக்கும். கலோரிகளும் குறைவு, நார்ச்சத்தும் அதிகம் என்பதால், உடல் எடை குறைக்க நினைப்போருக்கு, இந்த பப்பாளி பேருதவி புரிகிறது. வெறும் வயிற்றில் மாதுளையையும் சாப்பிடலாம். ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த இந்த பழம், ரத்த சுத்திகரிப்புக்கு நல்லது. மார்பக புற்றுநோய் செல்களை தடுத்து நிறுத்துகிறது.
பெஸ்ட் பழங்கள்: ப்ளூபெர்ரி, கிவி, ப்ளம்ஸ் பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் வயிறு சுத்தமாவதுடன், குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.