FDFS போகாதீங்க..! பயமா இருக்கு? விஜய் ரசிகர்களை விமர்சித்த நடிகை

post-img
சென்னை: அல்லு அர்ஜுன் படத்தைப் பார்க்க சென்ற ரசிகரின் மனைவி ஒருவர் உயிரிழந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பி வரும் நிலையில், அது குறித்து குட்டி பத்மினி தனது விமர்சனங்களை முன்வைத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 1500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெற்றி செய்தியைக் கேட்டு பலரும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு இந்தச் செய்தி சந்தோஷம் தருமா என்பது கேள்விக்குறிதான். தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அல்லு அர்ஜுனுக்கு 'புஷ்பா 2' ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்டது. அவரை கைது செய்யும் அளவுக்கு இந்தப் படம் அவர் வாழ்நாளில் மறக்க முடியாததாக மாறியுள்ளது. படம் வெளியான முதல் நாள் அன்று வழக்கமாக தன் குடும்பத்துடன் படம் பார்க்க தியேட்டர் ஒன்றுக்கு வந்துள்ளார் அல்லு அர்ஜுன். அங்கே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகக் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்மணி உயிரிழந்தார். அவரது மகனும் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குக் காரணம் அல்லு அர்ஜுன் தான் என காவல்துறை அதிரடியாக அவரை சமீபத்தில் கைது செய்து, அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த விவகாரம் சினிமா உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. தெலுங்கு பட உலகமே அல்லுவுக்கு ஆதரவாக நின்றது. மனைவி மற்றும் மகனை இழந்த ரசிகர், 'தனது மனைவியின் மரணத்திற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை. தேவை எனில் தனது புகாரை காவல்துறையிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன்' என்று அறிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து மூத்த நடிகை குட்டி பத்மினி சில யோசனைகளை அளித்துள்ளார். அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் இதற்கு முன்பாக விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து வெறித்தனமாக கொண்டாடியதை அவர் விமர்சித்துள்ளார். குட்டி பத்மினி இந்த விவகாரம் பற்றிப் பேசுகையில், "பலரது ரசிகர்கள் தனக்குப் பிடித்த ஹீரோ படத்தை முதல்நாள் முதல் ஷோ போய் பார்க்க ஆசைப்படுவார்கள். நானும் அப்படித்தான். சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் என்றால் முதல் நாள் முதல் ஷோ போய் பார்ப்பேன். அன்றைக்கு இருந்த ரசிகர்கள் வேறு. இன்றைக்குக் கொண்டாட்டம் அதிகமாகிவிட்டது. இப்படித்தான் ஒரு தியேட்டரில் பட்டாசு வெடித்தார்கள். ஒருவேளை அந்த தியேட்டர் தீப் பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த விபரீதத்தில் யாருக்காவது ஆபத்து வந்தால்? எனவே குடும்பத்தோடு ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். இப்படித்தான் 'புஷ்பா 2' வெளியான சந்தியா திரையரங்குக்கு ஒருவர் தன் மனைவி ரேவதி மற்றும் பிள்ளைகளுடன் படம் பார்க்க வைத்துள்ளார். அல்லு அர்ஜுன் தன் எல்லா படங்களையும் இந்த தியேட்டரில்தான் முதல் காட்சியைப் பார்ப்பாராம். அப்படிதான் புஷ்பா 2 பார்க்க ராஷ்மிகாவுடன் வந்துள்ளார் அல்லு. காவல்துறை பாதுகாப்பு இருந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்துள்ளார். அவரது 9 வயது கோமாவில் இருந்து சிறுவன் ஸ்ரீதேஜ் உயிரிழந்துள்ளார். அல்லு அர்ஜுன் 25 லட்சம் அந்தக் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறியுள்ளார். இந்தப் பணம் அந்த உயிரைத் திரும்பக் கொடுக்கப் போவதில்லை. என்னதான் பிடித்த நடிகராக இருந்தாலும் 5 நாட்கள் பொறுத்துப் பார்த்தால் என்ன? நான் நிறைய தெலுங்கு செய்தி சேனல்களைப் பார்த்தேன். அதில் 'புஷ்பா 2' சக்சஸ் மீட்டின் போது அல்லு அர்ஜுன் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தெரியாமல் தடுமாறி இருந்தார். அந்தக் கோபத்தில் தான் அல்லுவை கைது செய்தார் முதல்வர் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரேவந்த் ரெட்டி, அதை மறுத்து இருக்கிறார். ஒருவரால் உயிரிழப்பு நடந்தால் அவரை சிறையில் அடைப்பது வழக்கம் தான் என்று சொல்லி இருக்கிறார். இப்போது என் பிள்ளைகள் முதல் நாள் முதல் ஷோ போகப் போகிறேன் எனச் சொன்னால் எனக்குப் பயமாக உள்ளது. எனவே யாரும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போகாதீங்க" என்று மிகவும் வருத்தமாகப் பேசி இருக்கிறார்.

Related Post