புத்தாண்டு 2025: சனி பகவானால் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. யோகம் பெறும் ராசிகள் எவை தெரியுமா?

post-img
புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. சனி பகவான் வக்ர நிவர்த்யாகி நேராக பயணம் செய்து சில ராசிகளுக்கு யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப் போகின்றது. அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan 2025) தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு (2025 Rasi palan kanni) புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டு பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் தர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. செய்யும் கர்மத்திற்கு ஏற்ப பலன்களை அள்ளித் தரக் கூடியவர் சனி பகவான். நீதிமான், நீதிபதி என யார் எந்த கர்மங்களை செய்திருந்தாலும் அதனை சரிசமமாகப் பார்த்து நீதி வழங்குபவர். நன்மைகளாக இருந்தாலும், தீமைகளாக இருந்தாலும் பலன்கள் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பித் தருபவர். அதனால் தான் சனி என்றாலே எல்லோரும் பயப்படுபவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்வார். அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் சனி பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் இந்த வக்கிர நிவர்த்தி ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. எந்தெந்த ராசிகள் அதிர்ஷடத்தைப் பெறப் போகின்றனர என்பது குறித்து விரிவாக காணலாம்... மகர ராசி (Puthandu rasi palan for magaram): மகர ராசிக்காரர்களின் இரண்டசாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தியாகிறார். இதனால், உங்களுக்குப் பல்வேறு யோகங்கள் கிடைக்கப் போகின்றன. இதுவரை தடைபட்டு வந்த அனைத்து வேலைகளையு் திட்டமிட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். வெளியில் இருந்து வர வேண்டிய பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். கடன்களிலிருந்து விடுதலை அடைவீர்கள். பண வரவு உண்டாகும். வருமானம் பெருகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். ரிஷப ராசி (Puthandu rasi palan for rishabam): ரிஷப ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் சனி பகவன் வக்கிர நிவர்த்தியாகிறார். சனி பகவானால் பல்வேறு விதமான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவு உண்டாகும். பொருளாதார சூழல் சீராகும். கன்னி ராசி (Puthandu rasi palan for kanni): கன்னி ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நபர்களை அழைக்கவுள்ளார். இதனால், உங்களுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த ஏற்படப் போகும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பார். சேமிப்பு, முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். கடன் பிரச்னைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல பலன்களை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Related Post