மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று 12ம் வகுப்பு துணைத் தேர்வு தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று (ஜூன் 19ம் தேதி) உடனடி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் முன்னதாக அறிவித்தது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேயே உயர்கல்வியைத் தொடர முடியும் என்றும் கூறியிருந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த கன மழை பெய்த நிலையில் தற்போதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று (19.06.2023) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது.