சென்னை: சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறிய பயணம் செய்ததற்காக முதல் நாளே 12,100 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் அதிவேகமாகப் பயணித்த வாகன ஓட்டிகளை Radar Gun எனப்படும் அதிநவீன கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய வேக விதி அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 4 கார்கள், 117 இரண்டு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 12,100 வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை டிராபிக் ரூல்ஸ்: சென்னையில் சாலை போக்குவரத்து விதிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகள் மாற்றம்; இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அபராதம் மாற்றம்: சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அபராதமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனம் உள்ளிட்ட இலகுரக வாகனம் - ரூபாய் 1,000, கனரக வாகனம் - ரூபாய் 2,000 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறிய பயணம் செய்ததற்காக முதல் நாளே 12,100 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் அதிவேகமாகப் பயணித்த வாகன ஓட்டிகளை Radar Gun எனப்படும் அதிநவீன கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய வேக விதி அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 4 கார்கள், 117 இரண்டு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 12,100 வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விதிகளில் முக்கிய மாற்றம்: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சொத்து ஜப்தி, அபராத வட்டி.. நாளை முதல் எப்படி இருக்கும்.. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
விதி மீறல்: முன்னதாக அபராத விதிகளிலும் சில நாட்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். முக்கியமாக டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.