மும்பை: தனியார் ஜெட் மூலம் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார் நீதா அம்பானி.. இந்த இலங்கை பயணத்தின் நோக்கம் என்ன? இலங்கையிலிருந்து அவர் வாங்கி வந்த பொருட்கள் என்ன? என்பது குறித்த ஆர்வம் கிளம்பியிருக்கின்றன.
ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ரிஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி, இந்தியாவின் மிகப் பிரபலமான பெண் தொழிலதிபராக விளங்கி வருகிறார்.. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவராகவும் நிதா அம்பானி பதவி வகித்து வருகிறார்.
அறக்கட்டளை: இதைத்தவிர, ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளையும் செய்து வருகிறார்.. முக்கியமாக, கல்வி, மருத்துவம், கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றில் நிதியுதவியை தாராளமாக வழங்கி வருகிறார் நீதா.
பிரபலமான பெண்மணி என்பதால், இவரது நடை, உடை, வாழ்க்கை முறையே தனித்துவமாக இருக்கும்... உலகளவில் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாக கருதப்படும் மும்பையில் உள்ள 27 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடமான ஆன்டிலியாவில் நீதா அம்பானி வசித்து வருகிறார்.
காஸ்ட்லி பொருட்கள்: எப்போதுமே ஆரம்பரமான பொருள்களையே பயன்படுத்துவார்... உயர் ரக வாட்ச்கள், காலணிகள், ஹேண்ட்பேக்குகள் போன்றவைகளில்கூட, பெரிய பிராண்டுகளையே நிதா அம்பானி பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு Bulgari, Cartier, Gucci போன்ற பிராண்டுகள் நீதாவின் ஸ்பெஷாலிட்டியாகும்..
அதேபோல, ஆடை, ஆபரணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருபவர் நிதா அம்பானி.. எனவே, நீதா அணியும் ஆடைகள், அணிகலன்கள், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே, பலரது கவனத்தை சுண்டி இழுக்கும்.. மேலும், நீதா அம்பானியின் உடைகள், நகைகளின் போட்டோக்கள் இணையத்திலும் அவ்வப்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இலங்கை விசிட்: இந்நிலையில், இந்தியாவில் இருந்து திடீரென இலங்கைக்கு சென்றுள்ளார் நீதா அம்பானி.. அதுமட்டுமல்ல, அங்கிருந்து பீங்கான் கப்க உள்ளிட்ட டைனிங் செட்களை வாங்கிட்டு வந்திருக்கிறாராம்.. அது எவ்வளவு விலை தெரியுமா? இதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
நீதா அம்பானி எப்போது இலங்கை சென்றாலும், தனக்கு பிரியமான பொருட்களை வாங்கி வருவது அவரது பழக்கமாகும். 22 காரட் தங்கம் மற்றும் பிளாட்டினத்தை கொண்டு டிரிம் செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களான Noritake, இலங்கையில் மிகவும் ஃபேமஸானது.. அதன் உற்பத்தியும் இலங்கையில் அதிகம்.. இங்கிருந்துதான் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.. விலையும் கணிசமாக கிடைக்கிறது.. எனவேதான், தனியார் ஜெட் மூலம் இலங்கைக்கு பயணம் செய்து, பீங்கான் பொருட்களை வாங்கி வந்திருக்கிறார்.
இப்படித்தான் கடந்த 2010-ம் ஆண்டு, தன்னுடைய கிச்சனுக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் வாங்காமல், இலங்கை சென்று வாங்கினாராம்.. அதிலும், பழம்பெருமை கொண்ட நோரிடெக் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களையே வாங்குவாராம். இதற்கு காரணம், ஒவ்வொரு கோப்பையிலும் தங்கத்தாலான வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்குமாம்.
தேநீர் கோப்பைகள்: அந்தவகையில், நீதா அம்பானி வைத்திருக்கும் நேர்த்தியான தேநீர் கோப்பைகள் ஒவ்வொன்றும் 3,600 அமெரிக்க டாலர்களாகும்.. இது இந்திய மதிப்பில் ரூ 3 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.. ஏற்கனவே நிறைய டீ கப்களை நீதா அம்பானி வைத்திருக்கிறாராம்.. அப்படி பார்த்தால், அவரது தேநீர் தொகுப்பின் மொத்த மதிப்பு இதுவரை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 15 கோடிக்கு மேல்) தாண்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் நீதா அம்பானி, எப்போதுமே ஜப்பானில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டீ கோப்பையில்தான் டீ குடிப்பாராம். அந்த கோப்பையே ரூ.3 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்..
பீங்கான்கள்: ஆக மொத்தம், ஜெட் விமானம் மூலம் இலங்கை சென்று நீதா அம்பானி, பீங்கான்களை வாங்கி வந்தது ஆடம்பரமான வாழ்க்கை முறையாக தெரிந்தாலும், ஏறக்குறைய 70-80% செலவை இதன்மூலம் சேமித்து, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் இன்னொரு புத்திசாலித்தனமாக முடிவாகவே இது பார்க்கப்பட்டு வருகிறதாம்.
Weather Data Source: Wettervorhersage 21 tage