ஒரே நாடு ஒரே தேர்தல்.. தேர்தல் முறையையே மாற்றும் சட்டம்.. ஆதரிக்கும், எதிர்க்கும் கட்சிகள் எவை எவை?

post-img
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் இங்கே. பா.ஜ.க தேசிய மக்கள் கட்சி (NPP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் அப்னா தால் கண பரிஷத் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஜனதா தளம் (ஐக்கிய) லோக் ஜன சக்தி கட்சி (ஆர்) மிசோ தேசிய முன்னணி தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சிரோமணி அகாலி தளம் (SAD) ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் பாட்டாளி மக்கள் கட்சி இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தமிழ் மாநில காங்கிரஸ் (எம்) ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் ஐக்கிய கிசான் விகாஸ் கட்சி பாரதிய சமாஜ் கட்சி கோர்கா தேசிய லிபரல் முன்னணி இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி ஜன் சுரஜய் சக்தி ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சி மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி நிஷாத் பார்ட்டி புதிய நிதி கட்சி ராஷ்டிரவாதி காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி சிவசேனா சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் இங்கே. ஆம் ஆத்மி கட்சி (AAP) பகுஜன் சமாஜ் கட்சி (BSP) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி திரிணாமுல் காங்கிரஸ் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நாகா மக்கள் முன்னணி விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தேர்தல்:ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கலாக உள்ளது . ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது. இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும். இன்று மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேறு சில சட்டங்களை திருத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் ஐந்து பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும். 1, பாராளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83, 2, குடியரசுத் தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85, 3. மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172 சட்டமன்றங்கள், 4. மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 5.மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

Related Post