சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய டிடிஆர்.. சொந்த ஊருக்கு போன மனைவி.. பூட்டிய வீட்டுக்குள் கண்ட காட்சி

post-img
சென்னை: பொன்னேரி நகராட்சியில் அடங்கிய சக்தி நகரில் வசித்து வந்த 35 வயதாகும் ரவிநனபூர் என்பவர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.இவரது சொந்த ஊர் கர்நாடகா மாநிலம் ஆகும். அவரது மனைவி உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக கர்நாடகா சென்றுவிட்டார். இந்த சூழலில் ரயில் டிக்கெட் பரிசோதகர் பூட்டிய வீட்டிற்குள் இருந்த காட்சி அக்கம் பக்கத்தினரை அதிர வைத்துள்ளது. திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் அடங்கிய சக்தி நகரில் வசித்து வந்த 35 வயதாகும் ரவிநனபூர் என்பவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு பொம்மிமா (33) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பொம்மிமா குழந்தைகளுடன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுவிட்டார். ,இதனிடையே தனது கணவர் ரவிநனபூருக்கு நேற்று காலை பொம்மிமா செல்போனில் கணவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு பலமுறை அழைத்தும் செல்போன் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பயந்து போன பொம்மிமா, பொன்னேரி சக்தி நகரில் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவர், டிக்கெட் பரிசோதகர் ரவிநனபூர் வீட்டுக்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து பொன்னேரி போலீசாருக்கு ஆட்டோ டிரைவர் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ரவிநனபூர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மனைவி மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ரவிநனபூரின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய டிக்கெட் பரிசோகர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post