புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கன்னத்தில் 26 முறை பெண் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு பேருந்து பயணத்தின் போது பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதனால் அந்த பெண் தன்னை எத்தனையோ முறை தற்காத்து கொண்ட போதிலும் அவர் மீண்டும் மீண்டும் தவறான முறையில் கை வைக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரது சட்டையை பிடித்து சரமாரியாக அடித்தார்.
அந்த நபரின் இரு கன்னங்களிலும் மாறி மாறி 26 முறை பளார் விட்டார். அந்த நபரை பெண் அறையும் போது அவர் போதையில் இருந்த காட்சிகளும் வெளியாகின. இந்த சம்பவத்தின் போது அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த பெண்ணோ என்னா சாரி என கேட்டு மேலும் தாக்கினார்.
பேருந்தில் இருந்தவர்கள் யாரும் அந்த பெண்ணை தடுக்கவில்லை. பிறகு நடத்துநர் அங்கு வந்து அந்த பெண்ணை சமாதானம் செய்தார். மேலும் காவல் நிலையத்திற்கு பேருந்தை இயக்கவுள்ளதாகவும் கன்டக்டர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பெண் அவரிடமும் சண்டையிட்டார். இந்த பெண் உடற்கல்வித் துறை ஆசிரியர் என தெரிகிறது. குழந்தைகளுடன் பேருந்தில் சென்ற போதுதான் இது போன்றதொரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அந்த பெண்ணை சிலர் பாராட்டியும் சிலர் திட்டியும் வருகிறார்கள். சட்டத்தை கையில் எடுக்கலாமா, தவறு செய்தால் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கலாமே, எதற்காக அவரை 26 முறை தாக்கல் வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Pune Woman Slaps Drunk Man 25 times for Allegedly harrasing Her inside Bus
pic.twitter.com/S5kMNynJYf
குடி போதையில் இருந்த அந்த நபர் இந்த தாக்குதலால் இறந்துவிட்டால் என்ன செய்வது ? என கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு அரசு பேருந்து. இந்த பேருந்தில் வந்த அந்த பெண், தான் இறங்கும் இடம் வந்ததும் இறங்க ஆயத்தமானார். அப்போது அவரை அந்த போதை ஆசாமி பின்பக்கத்தில் கை வைத்ததாக கூறப்படுகிறது.
பேருந்துகள், ரயில்கள் இது போன்று பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடந்த வண்ண் இருக்கின்றன. இதை சிலர் தட்டி கேட்கிறார்கள். சிலர் பிரச்சினையாகிவிட போகிறது என அஞ்சுகிறார்கள். இன்னும் சிலர் இந்த பெண்ணை போல் தாக்கும் செயலிலும் ஈடுபடுகிறார்கள்.