சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு கரை ஒதுங்கிய ஆண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் வருடா வருடம் வெள்ளம் ஏற்பட தொடங்கி உள்ளது. 2015க்கு முன் அரிதாக இருந்த வெள்ளம்.. தற்போது இயல்பாகிவிட்டது. எல்லா வருடமும் டிசம்பர் மாதம் வந்தால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதிலும் இந்த வருடம் சென்னையில் 4000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகளில் தேங்கும் தண்ணீர்.. அப்படியே வடிகால் வழியாக கால்வாய்களில் கலந்து.. கடலுக்கு செல்லும். இதுவே வடிகால் அமைப்பு.
சென்னை வடிகால் அமைப்பு: இதற்காக சென்னையையே கூறு போட்டு மாபெரும் வடிகால்களை அமைத்தனர். பொதுவாக சென்னையில் நேற்று முதல்நாள் பெய்தது போல எல்லாம் மழை பெய்து இருந்தால் சென்னை 4-5 நாட்களுக்கு மிதந்து இருக்கும். சென்னையே மொத்தமாக முடங்கி இருக்கும்.
சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ளது: இந்த வடிகால் அமைப்புகள் இருந்தும் கூட எதிர்பாராத அதி தீவிர கனமழை காரணமாக சென்னையில் வடிகால்களும் பயன் அளிக்காமல் தண்ணீர் தேங்கி உள்ளது.
ஏனென்றால் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான். இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.
பலி எண்ணிக்கை: சென்னை புயல் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 15 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். அரசு தீவிரமாக செயல்பட்டது, சிறப்பாக திட்டங்களை வகுத்தது, முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
உடல் ஒதுங்கியது; இந்த நிலையில்தான், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு கரை ஒதுங்கிய ஆண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலை கடற்கரையில், நேற்று இரவு அந்த ஆண் சடலம் கரை ஒதுங்கி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்?, எவ்வாறு கடலில் அடித்து வரப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புயல் வெள்ளத்தில் சிக்கி இவரின் உடல் கரை ஒதுங்கியதா.. ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாரா? புயல் அடித்த போது கடலோரத்தில் இவர் நின்றாரா என்ற விசாரணைகள் செய்யப்பட்டு வருகின்றன.