பூக்களின் விலை திடீர் உயர்வு.. தோவாளை பூ மார்க்கெட்டின் விலை நிலவரம் இதுதான்..

post-img

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான தோவாளை பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மலர் வணிகச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

இந்நிலையில் இச்சந்தையில் திருவோணம், வரலட்சுமி விரதம் மற்றும் ஆவணி மாதம் முகூர்த்த நாட்களை முன்னிட்டு விற்கப்படும் பூக்களின் விலை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

தோவாளை மலர் சந்தையில் கடந்த வாரம் 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ கிலோ 1300 ரூபாய்க்கும், 600க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ 1100 ரூபாய்க்கும், 210 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ 200 ரூபாய்க்கும்,80 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாடாமல்லி கிலோ 200 க்கும், 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேந்தி பூக்கள் கிலோ 80 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ கிலோ 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

750 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை கிலோ 1000 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஸ் கிலோ 300 ரூபாய்க்கும், 320 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்டெம்ப் ரோஸ் ஒரு கட்டு 400 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட துளசி கிலோ 50 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தாமரைப்பூ 16 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மரிக்கொழுந்து 160 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்தி பூ 400 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட தெத்தி பூ கிலோ 250 ரூபாய் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து பலரகப்பட்டபூக்கள் வரவழைக்கப்பட்ட தோவாளை மலர் சந்தையில் விற்கப்படுவதால் இங்கு டன் கணக்கில் பூக்கள் தேக்கமடைந்துள்ளது. பூக்களின் விலை அதிகரிப்பால் பூக்களின் வியாபாரம் சற்று குறைந்து காணப்படுகிறது. திருவோணம் , வரலட்சுமி விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் இனி பூக்களின் விலை சிறிது நாட்கள் குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

 

Related Post