ஜெனீவா: மத்திய கிழக்கு, ரஷ்யா என இப்போது எங்குப் பார்த்தாலும் அணுக் குண்டுகள் குறித்த பேச்சே இருந்து வருகிறது. திடீரென அணு ஆயுத போர் வெடித்தால் அது நிச்சயம் சர்வதேச அளவில் பேரழிவை ஏற்படுத்தும். அப்படியொரு வேலை அணு ஆயுத போர் வெடித்தால் எங்கு இருப்பது நமக்குப் பாதுகாப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் சில இடங்களைப் பட்டியலிட்டுள்ளனர். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகெங்கும் 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், எதாவது ஒரு நாடு இதைப் பயன்படுத்தினாலும் கூட அது சர்வதேச அளவில் ஒரு சங்கிலி நிகழ்வை உருவாக்கி மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.
அணு ஆயுதங்கள்: அதிலும் இப்போது அணு குண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலில் ஒரு பக்கம் பதற்றம் அதிகரிக்கிறது. அருகிலேயே இருக்கும் ஈரானும் அணு குண்டுகளை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதேபோல மற்றொரு பக்கம் ரஷ்யாவும் கூட உக்ரைன் மீது அணு குண்டை போடுவோம் எனச் சொல்லி வருகிறது. ஒரு வேலை அணு ஆயுத போர் ஏற்பட்டால் அது சர்வதேச அளவில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுபோன்ற அணு ஆயுத போர் வெடித்தால் மிகப் பெரிய பேரழிவு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, அதுபோன்ற சூழல்களில் எந்த இடங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அவை எந்தெந்த நாடுகள்.. ஏன் அவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் உள்ளது...
எந்த நாடுகள்: இதில் முதலில் இருக்கும் பகுதி என்றால் அது அண்டார்டிகா தான்.. பனியால் சூழப்பட்ட இந்த பகுதி மனிதர்கள் வாழவே கடினமானதாக இருக்கும். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருப்பதால் ஒப்பீட்டளவில் அண்டார்டிகா பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. அணு ஆயுதங்களால் ஏற்படும் வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகும். இதனால் அண்டார்டிகாவில் மக்களால் வாழக்கூடிய சூழலும் உருவாகும்.
அடுத்து ஐஸ்லாந்து.. எப்போதும் அரசியல் நடுநிலையைப் பேணும் நாடு ஐஸ்லாந்து. மேலும், சர்வதேச அளவிலும் அமைதியான நாடுகளில் ஒன்றாகும். எனவே, ஐஸ்லாந்து நாட்டில் நேரடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு. அதேபோல உலகின் பிற பகுதிகளில் இருந்தும் தனித்து இருப்பதால் ஐஸ்லாந்தும் கூட பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகவே இருக்கும். கிரீன்லாந்து கூட இதே காரணங்களால் பாதுகாப்பான நாடுகளாக இருக்கும்
வேறு நாடுகள் எவை: அதேபோல ஜெர்னல் ரிஸ்க் அனாலிசிஸ் என்ற ஆய்விதழிலும் இது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளும் பாதுகாப்பானதாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் பிற பகுதிகளில் இருந்து தனித்து இருப்பது இதன் முதன்மை காரணம்.
மேலும், அணு ஆயுத தாக்குதலால் சர்வதேச உணவு சங்கிலி பாதிக்கப்படும். அப்போது தேவையான உணவுகளை சுயமாக உற்பத்தி செய்து கொள்ள வேண்டி இருக்கும். விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்புக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சிறந்த நாடாக இருக்கும் என்பதால் அந்த நாடுகளும் இந்த லிஸ்டில் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல தென் அமெரிக்காவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அர்ஜெண்டினா, சிலி நாடுகளும் கூட பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் இந்த லிஸ்டில் இந்தியா இடம்பெறவில்லை.
இது முக்கியம்: அதேநேரம் அணு ஆயுத போர் ஏற்பட்டால் நிச்சயம் இந்த நாடுகளில் இருப்போருக்கு எதுவும் ஆகாதா என நீங்கள் கேட்கலாம்.. ஆனால், அதை உறுதியாக சொல்ல முடியாது.. அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போது அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும். அதிலும் இப்போது உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா, நாகசாகியில் பயன்படுத்தப்பட்டதை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளன.
எனவே, உறுதியாக இந்த நாடுகளுக்குச் சென்றால் தப்பித்துக் கொள்ளலாம் எனச் சொல்ல முடியாது. ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்குப் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage